வங்காலை புனித சுவக்கீன் அன்னமாள் ஆலய திருவிழாவிற்கான நவநாட்கள் ஆரம்பம்

வங்காலை புனித சுவக்கீன் அன்னமாள் ஆலய திருவிழாவிற்கான நவநாட்கள்  புதன் கிழமை இன்று தொடக்கம் 26.07.2019வெள்ளி கிழமை வரை இடம் பெறவுள்ளது.

இன்று மாலை 5:30மணிக்கு புனித ஆனாள் ஆலய கொடி ஏற்றப்பட்டு அதனை தொடர்ந்து திருச்செபமாலையும், திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்.

தொடர்ந்து நவநாட்கள் மாலையில் சரியாக 5:30மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும் என்பதனையும் ஒவ்வொரு நாளும் திருப்பலிக்கான கருபொருட்களை மையப்படுத்தி மறையுரைகள் வழங்கப்படும் என்பதனையும் தெரிவித்து நிற்கின்றோம்.

இதே வேளை 25.07.2019 வியாழக்கிழமை வேஸ்பர் ஆராதனையும், இறுதியில் நற்கருணை பவனியும் இடம்பெறவுள்ளது.

திருவிழா திருப்பலி 26.07.2917 காலை 6:00மணிக்கு திருவிழா திருப்பலியும் அதனை தொடர்ந்து புனித ஆனாள் அன்னையின் திருச்சுருபம் தேர்பவனியாக வலம் வந்து இறைமக்களுக்கு இறையாசீர் வழங்கப்படும் என்பதனையும் அறியத்தருகின்றார்கள்.

எனவே பங்கு மக்கள், அயல் பங்கு மக்கள், ஆனாள் அன்னையின் இறைபக்தர்கள் அனைவரையும் ஆனாள் அன்னையின் இறையாசீர் பெற்றிட வங்காலை பங்குதந்தை, ஆலய மேய்ப்பு பணி சபையினர், பங்கு மக்கள் அழைத்து நிற்கின்றார்கள்.

Comments are closed.