அன்னையிடம் வேண்டி இரவு செபம்

தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே ஆமேன்!

எங்கள் அன்பான தந்தையே எங்களை அரவனைத்து ஆற்றுப்படுத்தி தேற்றுகிறவரே

அப்பா! மனதுருக்கத்தினால், எங்கள் ஒவ்வொருவரையும், எங்கள் வாழ்வையும் நிரப்புகிறவரே நன்றி செலுத்துகிறோம்.

அப்பா உம்முடைய அன்பின் பிரசன்னம் எங்கள் ஒவ்வொருவரையும் ஆட்கொள்ளவேண்டும், எங்கள் வாழ்வை பாதுகாக்க வேண்டும், எங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்க வேண்டுமென்று இந்த நாள் முழுவதும் எங்களோடு தங்கி இருந்து எங்கள் வாழ்வை உறுதிப்படுத்தின தெய்வமே நன்றி செலுத்துகிறோம்.

அப்பா! நாங்கள் வாழ்வதும், இயங்குவதும், இருப்பதும், உம்மாலே என்று எங்களுக்கு புரிய வைத்தீரே நன்றி செலுத்துகிறோம்.

எங்கள் வாழ்வு உமக்கு ஏற்றதாய் சாட்சியமாய் வல்லமையாய் இருக்க வேண்டுமென்று எங்கள் ஒவ்வொருவரையும் அரவனைத்தீரே நன்றி செலுத்துகிறோம்.
உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தினீரே நன்றி செலுத்துகிறோம்.

அப்பா! எங்கள் வாழ்க்கையிலே இருந்து கஸ்ரமான, வேதனையான, போராட்டமான நிலமைகளை தெய்வீக கிருபையினால் , தெய்வீக இரக்கத்தினால் ,மாற்றி ஆசீர்வாதத்தை அதிகமாய் கொடுத்தீரே நன்றி செலுத்துகிறோம்.

எங்கள் ஒவ்வொருவருக்குள்ளாய் இருக்கிற போராட்டங்களை, கஸ்ரங்களை, சுமைகளை, பாடுகளை, மாற்றினீரே நன்றி செலுத்துகிறோம்.

இரவு பொழுதுக்காய் உம்பாதத்திலே நாங்கள் நிற்கிறோம் இந்த இரவிலே நாங்கள் நிம்மதியான உறக்கத்தை, ஆசீர்வாதமான கனவுகளை பெற்றுக்கொள்ள எங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியுங்க.

அப்பா! உம்முடைய வல்லமையின் கரம் எங்களை தேற்ற, திடப்படுத்த, அந்த ஆசீர்வாதத்திலே நாங்கள் வளர, வாழ எங்கள் ஒவ்வொருவரையும் தொடுவீராக அர்ப்பணிக்கிறோம். புனிதர்கள் மறைசாட்சிகள் எங்கள் உறக்கத்திற்காய், கனவுகளுக்காய் தொடர்ந்து பரிந்து பேசுங்க எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே ஆமே

Comments are closed.