எமது சகோதர பங்கு சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் 147 அப்பாவி மக்கள் படுகாலையின் 24ஆவது நினைவேந்தல்

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை தேவாலயத்தில் நினைவுகூரப்பட்டது.

சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் இன்று மாலை பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து தேவாலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ள நினைவுத் தூபியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்

நன்றி நண்பா  – படம் மயூ

Comments are closed.