முப்படையின் அதியுச்ச பாதுகாப்புடன் மடு அன்னைக்கு ஆடி திருவிழா

மன்னாா்- மடு மாதா திருத்தலத்தின் வருடாந்த ஆடி திருவிழா திருப்பலி இன்றைய தினம் முப்படையினாின் உச்ச பாதுகாப்புடன் நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மாணுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் கலாநிதி அன்ரனி ஜெயகொடி

ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பலியாக திருவிழா திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.அதனைத்தொடர்ந்து திருச் சொரூப பவணியும், ஆசியும் வழங்கப்பட்டது.

Comments are closed.