1ம் ஆண்டு நினைவஞ்சலி சுவாம்பிள்ளை ஞானராஜ்
எம் கனவில் கலந்த – உன்
எல்லையற்ற நினைவுகள்
நிற்கின்றன நிழலாக!
உன்னை இழந்து
ஆண்டு ஒன்று ஆனாலும்
உந்தன் அன்பு முகமும்
நேசப் புன்னகையும்
மறையவில்லை!
பூமியிலே ஒன்றாய் இருந்து
கூடி மகிழ்ந்த காலமெல்லாம்
மறைந்திடுமோ!
எங்கள் அன்பு ராசனே!
உன் சிரிப்பு எல்லோருக்கும் பிடிக்குமையா
அதனால்தான் இது
கடவுளுக்குப் பிடித்ததோ!
உன்னை அவசரமாய் அழைத்துவிட்டான்
நொடிப் பொழுதில் – எமை
வருந்த விட்டுச் சென்றுவிட்டீர்!
வருடங்கள் நீளலாம் – ஆனால்
உன் நினைவுகள் என்றும் நீங்காது!
ஒரு ஆண்டு என்ன!
நாம் இந்த மண்ணில் வாழும் வரை
நம் இதயத் தோட்டத்தில் ஓயாது
பூத்துக் கொண்டிருக்கும்
உன் நினைவுகள்!
நீ விட்டுச் சென்ற உன் நினைவுகளுடன்
வாழ்ந்து கொண்டிருப்போம்
உன் நினைவில் வாடும்
மனைவி, மகள்
Comments are closed.