உதவித் தொகை வழங்கிய முஸ்லிம் வர்த்தகர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் நோக்கிலும், இனங்களுக்கிடையில் நல்லுறவை மேம்படுத்தும் வகையிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் முஸ்லிம் வர்த்தகரான நஸ்றூன் ஒரு தொகை நிதியுதவியை வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் இன்றையதினம் இடம்பெற்ற சந்திப்பின் போது, ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையிடம் இந்த நிதியை அவர் கையளித்துள்ளார்.

இந்த சந்திப்பில் யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை, யாழ் மாநகரசபை முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட், உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

Comments are closed.