காலை செபம்

எங்கள் அன்பான பரிசுத்த தந்தையே இறைவா! எங்களை அர்ப்பணிக்கிறோம், இந்த இரவு முழுவதும் எங்களை பாதுகாத்து, ஆசீர்வதித்து புதிய நாளுக்குள்ளாய், புதிய அன்பிற்குள்ளாய், நாங்கள் காலடி எடுத்து வைக்க எங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கிறவரே, அரவணைக்கிறவரே நன்றி செலுத்துகிறோம்.

எங்களுடைய உள்ளங்களை, இல்லங்களை உமது தெய்வீக கிருபையினால் எல்லாவிதத்திலும் எழுந்து பிராகாசிக்க செய்தீரே நன்றி செலுத்துகிறோம்.

உம்முடைய வார்த்தைகள் சொல்லுகின்றதே இவற்றைவிட, இவர்களை விட என்னை அன்பு செய்கிறாயா என்ற கேள்வி

அப்பா! இந்த நாள் முழுவதும் எங்களுடைய காதுகளில் ஒலிப்பதாக, எங்கள் சிந்தனைகளில் இருப்பதாக. ஒவ்வொரு சூழ்நிலைகளிலும், ஒவ்வொரு சந்திப்பிலும், உம்முடை அன்பை நாங்கள் விதைக்கிறவர்களாய் உம்முடைய ஆசீர்வாதத்தை வெளிப்படுத்துகிற பிள்ளைகளாக நாங்கள் நடமாட எங்களை, எங்கள் வாழ்வை ஆசீர்வதியுங்க.

அப்பா! எங்களோடு தங்கியிருந்து எங்களை உருவாக்குவீராக, உருமாற்றுவீராக எங்கள் குடும்பத்தில் இருக்கிற வேதனையான, கஸ்ரமான,போராட்டமான நிலமைகள் ஆசீர்வாதங்களாய் மாறுவதாக இந்த நாளிலே எங்களது திட்டங்கள் எல்லாம் உம்கரத்திலேயே அர்ப்பணிக்கிறோம் தெய்வம் நன்மைத்தனங்களை மட்டும் வெளிப்படுத்தி கொடுப்பீராக.

உம்முடைய ஆசீர்வாதமான செயல்கள், எங்கள் குடும்பங்களிலே வெளிப்படட்டும், எங்கள் வாழ்கையிலே வெளிப்படட்டும். இந்த நாளின் எல்லா தேவைகளையும் சந்தியுங்க, எல்லா சூழ்நிலைகளிலும் எங்களோடு கூடவே இருக்க கரம்பிடித்து வழிநடத்துங்க புனிதர்கள் மறைசாட்சிகள் இந்த பகல் முழுவதும் பாதுகாத்து வழிநடத்தி ஆசீர்வாதத்தை பொழிய உம்மை வேண்டுகின்றோம் எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே ஆமேன்

Comments are closed.