குருக்களே உலக அரசர்களை விட பெரிய அரசர்கள்

ந்த உலகில் இதுவரை வாழ்ந்த எந்த ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியும் ஒரு குருவிற்கு இனையாகிவிட முடியாது.. இந்த உலகத்தில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற எந்த ஒரு மிகப்பெரிய வல்லரசு நாட்டின் அதிபரோ, பிரதமரோ ஒரு குருவிற்கு இனையாகிவிட முடியாது..

அரசர்களையும், அதிபர்களைகளையும் விட மிக மேலான மகிமையான அரசர்கள் குருக்கள்… ஏன்…???

அரசர்களுக்கெல்லாம் அரசரான நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவின் பணிகளைச் செய்வதால்..அதிலும் திவ்ய திருப்பலியின் போது நம் அரசரான ஆண்டவர் இயேசுக்கிறிஸ்துவாக மாறுவதால் அவர்கள் அரசர்களாகிறார்கள்..

இதில் அவர்களுக்கு பெருமை இருந்தாலும் அதைவிட தாழ்ச்சியே மிக அதிகமாக இருக்கிறது…
பெரிய வியாழன் அன்று, “ உங்கள் அரசனும் ஆண்டவருமான நான் உங்கள் பாதங்களை கழுவுகிறேன் என்றால்… நீங்களும் ஒருவருக்கொருவர் உங்கள் பாதங்களை கழுவுங்கள் “ என்ற நம் அரசனின் ஆணையை ஏற்று ஒவ்வொரு பெரிய வியாழன் அன்றும் ஆண்டவர் இயேசுவைப்போல் உள்ள அரசனான குருக்கள் தாழ்ச்சியோடு சாதாரன மனிதர்களின் பாதங்களை கழுவும் போது அவர்கள் அரசர்களாக உயர்ந்து நிற்கிறார்கள்…

ஆண்டவர் இயேசுவின் உடலும் இரத்தமுமாக மாறிய திவ்ய நற்கருணை நாதரை அவர்கள் கரங்கள் மட்டுமே தொடுவதால்..அவர்கள் அரசர்களாகிறார்கள்.. (அபிஷேகம் செய்யப்பட்ட குருக்களின் கரங்களுக்கு மட்டுமே ஆண்டவர் இயேசுவைத் தொட உரிமை உண்டு)

அதே திவ்ய நற்கருணை ஆண்டவரை புது நன்மை வாங்கிய ஒவ்வொரு கத்தோலிக்கர்களுக்கும் நாவில் ஒரு தாயைப்போல் ஊட்டி விடுவதால் அவர்கள் அரசர்களாகிறார்கள்… அபிஷேகம் செய்யப்பட்ட கரங்களை உடையவர்களாதாலால்..அவர்கள் அரசர்கள்.. ஆண்டவர் இயேசுவின் உடலைத் தொட அவர்கள் அனுமதிக்கப்படுவதால் அவர்கள் அரசர்கள்…

குருத்துவத்தை ஆண்டவர் ஏற்படுத்திய அன்றே தன் சீடர்களின் கால்களைக் கழுவி தாழ்ச்சியை கற்றுக்கொடுத்து “ உங்களுள் யார் பெரியவனாக இருக்க விரும்புகிறானோ அவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும் “ என்று தலமைக்குருவும், நம் எல்லோரின் அரசனுமான ஆண்டவர் ஏற்படுத்திய குருத்துவப்பணியை செய்வதால்…அதிலும் முக்கியமாக அவர்கள் நேரிடையாக மூவொரு கடவுளுக்கு பணிவிடை செய்வதால் அவர்களே அரசர்கள்.. அதே போல் தன் பங்கு மக்களுக்கும் பணி புரிவதால் அவர்கள் அரசர்கள்…

ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தின் மன்னன் ஒருவனால் மக்களுக்கு மட்டும்தான் பணி புரிய முடியும்.. அந்த சாம்ராஜ்ஜியத்தின் மன்னனைவிட பெரிய மன்னர்களான நம் குருக்களால் ஆண்டவருக்கும், மக்களுக்கும் பணிவிடை புரிய முடிகிறது..அதனால் குருக்களே உலக அரசர்களை விட பெரிய அரசர்கள்…

ஆகையால் நம் பிள்ளைகளை அரசராக்க ஆசைப்பட்டால் நம் பிள்ளைகளின் விருப்பத்தோடு அவர்களைக் குருக்களாக்குவோம்… அதன் மூலம் மூவுலக அரசரான நம் ஆண்டவர் இயேசுவிடமிருந்து எண்ணற்ற ஆசிகளையும், வரங்களையும் பெறுவோம்…

குருத்துவம் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம்… தேவ அழைத்தல் மிகப்பெரிய பாக்கியம்… தேவ அழைத்தல்களுக்காக அதிகமாக ஜெபிப்போம்… அதிகமாக குருக்களும், கன்னியர்களும் மூவொரு கடவுளால் அழைக்கப்பட ஜெபிப்போம்.

Comments are closed.