சேவையாற்றுதல் வழியாக, இயேசுவோடு இணைந்திருத்தல்

கருவில் உருவானது முதல், இயற்கையாக மரணம் அடையும் வரை, வாழ்வு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன், மே 20, இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

‘தீவிர நோய்களோடு வாழ்ந்துகொண்டிருப்போருக்காக செபிப்போம். இறைவனின் கொடையான வாழ்வை அதன் துவக்கத்திலிருந்து இயற்கையான முடிவுவரை, பாதுகாப்போம். தூக்கியெறியும் கலாச்சாரத்திற்கு நம்மை உட்படுத்தாதிருப்போம்’ என வின்ணப்பிக்கிறது, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி.

மேலும், இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘இறைவார்த்தைக்கு செவிமடுப்பது, திருஅருளடையாளங்கள், சகோதரத்துவ வாழ்வு, மற்றவர்களுக்கு சேவையாற்றுதல் ஆகியவைகள் வழியாக, ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடு இணைந்திருப்போம்’ என விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தங்கள் அத்லிமினா சந்திப்பையொட்டி, உரோம் நகர் வந்திருந்த பிலிப்பீன்ஸ் ஆயர்கள் 32 பேரை, இத்திங்கள் காலை, வத்திக்கானில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.