யாழ்ப்பாண மறைமாவட்ட பேராயரால் குழந்தை இயேசு தேவாலயம் திறப்பு

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் மணியங்குளம் விநாயகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட குழந்தை இயேசு தேவாலயம் யாழ்ப்பாண மறைமாவட்ட பேராயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையால் நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்டு வழிபாடுகளும் இடம்பெற்றன.

வழிபாட்டின் பின்னர் யாழ்ப்பாண மறைமாவட்ட பேராயரால் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது எனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருக்கின்ற தேவாலயங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு ஞாயிறு வழிபாடுகளும் இடம்பெற்று வருவதாக தெரிவித்தார்.

Comments are closed.