அதிகாலை 5.00 மணி ஜெபமாலை கருத்துக்கள் :

தினமும் அதிகாலை 5.00 மணிக்கு கத்தோலிக்கர்களாகிய நாம் அவரவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஜெபிக்கவேண்டிய ஜெபமாலைக் கருத்துக்கள்

1. தமதிருத்துவத்திற்கு மகிமையாகவும், திவ்ய நற்கருணை நாதருக்கு நடக்கும் நிந்தை அவமானங்களுக்கு பரிகாரமாகவும்,

2. இயேசுவின் திருஇருதய பக்தியும், மாதாவின் மாசற்ற இருதயத்தின் பக்தியும், அனைத்து குடும்பங்கள் மற்றும் உலகமெங்கும் பரவவும்,

3. மரியாயின் மாசற்ற இருதயத்தின் வெற்றிக்காகவும், பரிசுத்த கன்னிகையின் கருத்துக்களுக்காகவும், பரிசுத்த பாப்பரசர் உலக ஆயர்களோடு சேர்ந்து ரஷ்யாவை மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கவும்,

4. பாரம்பரிய பக்த சபைகளும், கத்தோலிக்க பாரம்பரிய பக்தியும் காப்பாற்றப்படவும்,

5. பாவிகள் மனம்திரும்பவும், உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்கள்- யாரும் நினையாத ஆன்மாக்கள் விண்ணகம் சேரவும், போப் ஆண்டவரின் சுகிர்த கருத்துக்களுக்காகவும்,

6. பரிசுத்த போப் ஆண்டவர் இந்த ஆண்டை ஜெபமாலை ஆண்டாக அறிவிக்கவும், குடும்ப ஜெபமாலைகள் அனைத்து குடும்பங்களிலும் மலரவும்,

7. தீயசக்திகள் பிடியிலிருந்து விடுதலை பெறவும், குடும்ப சமாதானத்திற்காகவும், உலக அமைதிக்காகவும், இறைவன் மந்தையை விட்டகன்ற ஆடுகள் மீண்டும் அவரது மந்தையை நோக்கி மனம் திரும்பி வரவும் மேலும் நம் சொந்தக் கருத்துக்களுக்காகவும் ஒப்புக்கொடுப்போம்.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க

Comments are closed.