பத்திமா மாதாவின் குரலொலி” என்கின்ற நூல் வெளியீடு
புனித பாத்திமா அன்னையின் திருக்காட்சி திருவிழாவை சிறப்பிக்குமுகமாக ” பத்திமா மாதாவின் குரலொலி” என்கின்ற நூல் இன்று (11.05.2019)மாலை வெளியிடப்படுகின்றது.புனித பத்திமா அன்னையின் யாத்திரிகர்கள் ஸ்தலத்தின் 75ம் ஆண்டு நிறைவில் ஆலய வரலாறுகள் தாங்கியதாகவும் ” பத்திமா கிரி,முதிர்ந்த இராசமுருக்கின் ஒலி” ஆகிய ஆரம்ப கால சஞ்சிகைகள் அடங்கியதாக இந்நூல் உருப்பெற்றிருக்கின்றது.வரலாற்று படங்களுடன் புதுப்பொலிவு பெற்று வரும் ஸ்தல சூழலின் படங்களும் அச்சுருப் பெற்றிருக்கின்றன.ஆன்மிக பணியில் பங்கின் பரிபாலகர் அருட்கலாநிதி APR மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களின் முயற்சிகள் காத்திரமானது.
Comments are closed.