இளையோரே, இயேசுவின் இறையாட்சி கனவை நனவாக்கத் தயாரா
நம் மத்தியில் இருக்கும் இறைவனையும், சகோதரர், சகோதரிகளையும் அன்புகூர அழைக்கும், இயேசுவின் இறையாட்சி கனவை நனவாக்குங்கள் என்று, இத்தாலிய இளையோரிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியின் பிரேஷா மறைமாவட்டத்தின், ஏறத்தாழ மூவாயிரம் இளையோரை, இச்சனிக்கிழமை நண்பகலில், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வீட்டுப்பாடம் ஒன்றையும் இளையோருக்கு அளித்தார்.
ஜொவான்னி பத்திஸ்தா மொந்தினி என்ற இயற்பெயரைக் கொண்ட, அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் பிறந்த பிரேஷா மறைமாவட்டத்தின் இளையோரிடம், அத்திருத்தந்தையின் இளமைக்கால வாழ்வு மற்றும் அவரின் கனவுகள் பற்றிச் சிந்திக்கும் வீட்டுப்பாடத்தை அளித்தார், திருத்தந்தை பிரான்சி
Comments are closed.