தரம் 1-5 வரையான பாடசாலைகள் மே 13ஆம் திகதியே ஆரம்பம்

தரம் 1 தொடக்கம் 5 வரையான அனைத்து அரச ஆரம்ப பாடசாலைகளும் மே மாதம் 13ஆம் திகதியே ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை அரச தகவல் திணைக்களம் இன்றிரவு வெளியிட்டது.

அத்துடன் தரம் 6 தொடக்கம் 13 வரையான பாடசாலைகள் நாளைமறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அனைத்து அரச பாடசாலைகளிலும் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் நாளைமறுதினம் 6ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகின்றன.

அத்துடன், தரம் 1 தொடக்கம் 5 வரையான ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகின்றன.

நாட்டில் உயிர்த்த ஞாயிறன்று (ஏப்ரல் 21) நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் ஏப்ரல் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்படவேண்டிய இரண்டாம் தவணை நாளைமறுதினம் 6ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

Comments are closed.