குண்டு வெடிப்பின் எதிரொலி!

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிரிஸ்டியன் நோயல் இமானுவேல் ஆண்டகை அவர்களை அன்னாரின் ஆயர் இல்லத்தில் வைத்து திருகோணமலை மாவட்ட ஜம்யத்துல் உலமா சபை, திருகோணமலை வர்த்தக சங்க சம்மேளனம், திருகோணமலை மாவட்ட அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம் ஆகியன சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது நேற்று இடம் பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்த உறவுகளுக்கு தங்களது ஆழ்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும், இவ்வாறான மிலேச்சத்தனமான கொடூர தாக்குதலை மேற்கொண்டவருக்கெதிராக பாரபட்சமின்றி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் இவ்வாறான சம்பவம் இனி ஒருபோதும் நடக்க இடமளிக்கக் கூடாதுஎனவும் தெரிவித்தனர்.

அத்தோடு திருகோணமலை மாவட்ட முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராகஉள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட ஜம்யத்துல் உலமா சபை சார்பாக கருத்து தெறிவித்தனர்.

Comments are closed.