ஐந்து கொழும்பு தேவாலயங்களில் குண்டு வெடிப்பு

கத்தோலிக்க இறைமக்களே ஆண்டவர் உயிர்த்த இந்த புனிதமான நாளில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவங்கள்.

கத்தோலிக்க இறைமக்கள்உலகம் முழுவதுமாக ஆண்டவர் யேசுக்கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவை கொண்டாடும் இன்றைய நாளில் இலங்கை தேசத்தில் குறிப்பாக கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திலும், நீர்கொழும்பு கற்றுவப்பிற்றிய புனித செபஸ்ரியார் ஆலயத்தின் மீதும் ,மட்டக்களப்பு அலயத்திலும்குண்டு வெடிப்பு சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறிப்பாக கத்தோலிக்க மக்கள் இறையேசுவின் உயிர்ப்பு விழாவினை அர்த்தமுள்ள விதத்தில் கொண்டாடும் இந்த வேளையில் திருப்பலி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது கத்தோலிக்க திருச்சபையை அழிக்கும் முயற்சியாக நாம் உணரவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

எது எவ்வாறாக இருப்பினும் ஆண்டவர் யேசுவின் அழியாத நம்பிக்கையுடனும், அன்னை மரியாளின் விசுவாச நம்பிக்கையுடனும் எமது பயணம் தொடரும்.

எனவே உலக வாழ் கத்தோலிக்க இறைமக்களே இந்த வெடிப்பு சம்பவத்தில் பலர் மரணமாகி உள்ளனர், பலர் காயப்பட்டு உள்ளனர், சிலர் அதி சிகிச்சைப்பிரிவில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர் என்பதோடு அனைத்து கத்தோலிக்க இறைமக்களையும் இந்த வெடிப்பு சம்மவத்தால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்காக இறைவேண்டுதல் செய்யும்படியாக தயவன்போடு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

Comments are closed.