திருத்தந்தை பிரான்சிஸ் விழுந்து முத்தமிட்டுஉள்நாட்டு போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு வேண்டினார்

. ஆசிரியரை மாணவர்கள் மதிக்காத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு உலகவாழ் கத்தோலிக்கர்களின் தந்தை பிரான்சிஸ் காலில் வீழ்ந்தமை ஆச்சரியமே!🙂
தெற்கு சூடானில் 5 ஆண்டுகளாக உள்னாட்டு போர் நடந்து வருகிறது, 400000 மக்களுக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர். கோடிக்கும் மேல் மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். எதிர் அணி தலைவர் வீட்டுக் காவல் சிறையில் இருந்தார்.
கடந்த மாதம் அதிபர் சால்வா கீர் வத்திகானில் திருத்தந்தையை சந்தித்தார். பின் இந்த மாதம் அதிபருக்கும் எதிரணி தலைவர்களுக்கும் சமாதனம் ஏற்படுத்தவும் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு கொண்டுவரவும், மே மாதம் இரண்டு அணி தலைவர்களையும் கொண்டு ஒரு கூட்டணி சமாதான அரசை நிறுவும் வன்னம் வத்திக்கானில் ஒரு தியானம் (Retreat) இந்த சண்டையிட்டுக்கொள்ளும் தலைவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
நேற்று இக்கூட்டத்தின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் தெற்கு சூடானின் அதிபர் மற்றும் எதிர் அணி தலைவர்களின் கால்களில் விழுந்து முத்தமிட்டுஉள்நாட்டு போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு வேண்டினார்.
“அன்புள்ள சகோதர சகோதரிகளே அமைதி சாத்தியம். நான் இதை மீண்டும் மீண்டும் சொல்லுவதில் ஓயமாட்டேன் – அமைதி சாத்தியம்” என்று திருத்தந்தை கூறினார்

Comments are closed.