மடு திருத்தலத்திற்கு அமைச்சர் ரவி கருணாநாயக்க திடீர் பயணம்

மன்னார் மடு திருத்தலத்திற்கு அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று வியாழக்கிழமை மாலை திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுண்டிருந்தார்.

விசேட வானுர்தி மூலம் மடு திருத்தலத்திற்கு வருகை தந்த கெளரவ அமைச்சர் விசேட வழிபாட்டில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பொப்பி சோசை அடிகளார், மன்னார் குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் மற்றும் அருட்தந்தையர்களை சந்தித்து உரையாடியுள்ளார்.

இதன்போது மடு திருத்தலத்தின் பல்வேறு அபிவிருத்தி விடையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதுடன் குறிப்பாக மடு திருத்தலத்திற்கான வீதி மின் விளக்குகள் பொருத்துதல்,மடு திருத்தல பகுதியில் எதிர்வரும் காலங்களில் சூரிய மின்சக்தியூடாக மின் வழங்குதல் உள்ளிட்ட விடையங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு மாந்தை ஆலயம் தொடர்பாகவும், மாந்தை லூர்து அன்னை ஆலய முன்றலுல் இந்து மக்கள் வளைவு அமைக்கப்பட்டமை தொடர்பாகவும் தற்போதைய நிலைப்பாடுகள் பற்றியும் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.