துறவு வாழ்வு பற்றிய திருத்தந்தை

துறவறக் குழுமங்களைவிட்டு, சட்டத்திற்குப் புறம்பே வெளியே இருக்கும் துறவிகள் பற்றிய புதிய விதிமுறைகள் அடங்கிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Motu Proprio திருத்தூது கடிதம் ஒன்று,  வெளியிடப்பட்டுள்ளது.

Communis Vita என்ற தலைப்பில், தனது சொந்த விருப்பத்தினால் வெளியிட்டுள்ள இத்திருத்தூது கடிதம் வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துறவிகள் பற்றிய திருஅவை சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார். இந்த மாற்றங்கள், வருகிற ஏப்ரல் 10ம் தேதியன்று அமலுக்கு வருகின்றன.

சபைகளின் கொள்கைகளுக்குப் புறம்பே, குழுமங்களைவிட்டு வெளியே வாழ்கின்ற துறவிகள், குழுமங்களுக்குத் திரும்பி வருவதற்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் வாழ்கின்ற இடங்கள் ஆறு மாதங்கள் வரை கண்டுபிடிக்க முடியாவிட்டால், அவர்களை சபையைவிட்டு விலக்குவதற்குரிய நடைமுறைகள் தொடங்கப்பட வேண்டும் என்றும், 12 மாதங்கள் குழுமங்களைவிட்டு தொடர்ந்து வெளியே வாழ்ந்தால், அவர் சபையைவிட்டு நீக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.