பண்டத்தரிப்பு புனித பத்திமா அன்னை யாத்திரிகர்கள் ஸ்தலத்தில் புனித சூசையப்பர் திருவிழா

பண்டத்தரிப்பு புனித பத்திமா அன்னை யாத்திரிகர்கள் ஸ்தலத்தில் புனித சூசையப்பர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திர இலங்கைக்கு முற்பட்ட ஆங்கிலேய பாதிரியாரினால் அமைக்கப்பட்ட வழிபாட்டிடம் மெருகூட்டப்பட்டு இன்று (19/03/2019) மாலை திருச்சிலுவை பாதை நிறைவில் திருப்பலியோடு ஆசீர்வதிக்கப்பட்டு திறந்துவைக்கப்பெற்றது.பலதரப்பட்ட வரலாறுகள் கொண்டமைந்த புனித இடமாக காணப்பட்டதாக நூல்களும் முன்னோர்களும் சான்றுபகருகின்றனர்.அனைத்தையும் முதன்மைப்படுத்தி அன்னையின் ஆலய சூழலை தொடர்ந்தும் மகிமைப்படுத்திவருகின்ற பங்கின் பரிபாலகர் அருட்கலாநிதி மைக்கல் சவுந்தரநாயகம் அவர்கள் சிறப்பிற்குரியவர்.திருவிழாவில் அருட்சகோதரிகள் பங்குமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Comments are closed.