பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்

ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!

எங்கள் அன்பான தந்தை பாசமாய், நேசமாய், இரக்கமாய், உருக்கமாய், எங்களை அரவணைக்கின்றவரே, ஆற்றுப்படுத்துகிறவரே, திடப்படுத்துகிறவரே, பெலப்டுத்துகிறவரே, எங்கள் உள்ளத்தின் ஏக்கங்களை எதிர்பார்ப்புகளை புரிந்து வைத்திருக்கிறவரே நாங்கள் நினைப்பதற்கும், செபிப்பதற்கும், எதிர்பார்ப்பதற்கும், மேலாக எங்கள் வாழ்க்கையில் நன்மை தனங்களை அள்ளிக் கொடுக்கிறவரே ஆசீர்வாதங்களினால் எங்கள் ஒவ்வொருவரையும் அரவணைத்து ஆசீர்வதிக்கிறவரே சோர்வுகள், தளர்வுகளை, எல்லாம் எங்கள் வாழ்க்கையில் மாற்றி எங்கள் வாழ்க்கையை உற்சாகத்தால் நிரப்புகிறவரே நன்றி செலுத்துகிறோம்.

அப்பா! புதிய நாளில், புதிய ஆசீர்வாதத்தால் எங்கள் ஒவ்வொருவரையும் மூடுவதற்காக, மறைப்பதற்காக, பாதுகாப்பதற்காக, ஆசீர்வதிப்பதற்காக நன்றி செலுத்துகிறோம்.

எங்கள் வாழ்வு உமக்கு சொந்தமாவதற்காய் நன்றி, எங்கள் வாழ்வு உமக்கு எல்லா விதத்திலும் ஏற்றதாய் இருக்க இந்த நாளில் எங்களை ஆசீர்வதியுங்க.

நாங்கள் அல்ல எங்களுடைய திட்டங்கள் அல்ல உம்முடைய திட்டம், உம்முடைய செயல்பாடுகள், எங்கள் வாழ்க்கையில் வெளிப்படுவதாக, எங்கள் குடும்பங்களில் வெளிப்படுவதாக, எங்கள் உள்ளத்தில் இருக்கிற எல்லா விதமான வேதனைகளையும், பாரங்களையும், சுமைகளையும், கண்ணீரையும், தெய்வம் மாற்றுவீராக, ஆசீர்வாதத்தினால் எங்களை நிரப்புவீராக, வழி நடத்துவீராக, எங்களை பாதுகாப்பீராக, உம்முடைய அன்பின் பிரசன்னம், ஆற்றலின் பிரசன்னம், இரக்கத்தின் கிருபையின் பிரசன்னம், எங்கள் ஒவ்வொருவரையும், எங்கள் வாழ்வையும், இந்த நாளில் மூடியிருக்க உதவி செய்யுங்க, புனிதர்கள், மறைசாட்சிகள் இந்த நாள் முழுவதும் எங்களுக்காக பரிந்து பேசுங்க, எல்லாம் வல்ல இறைவன் பிதா சுதன் பரிசுத்த ஆவி உங்கள் அனைவரையும் இந்த நாள் முழுவதும் ஆசீர்வதித்து பாதுகாப்பாராக ஆமென்.

Comments are closed.