ஒரு பைபிள்கூடத் தீயில் கருகவில்லை!’ – அதிர்ந்துபோன தீயணைப்புத்துறை

வர்ஜீனியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் பெரியளவிலான தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு அதிசயக் காட்சியைப் பார்த்து ஸ்தம்பித்துப்போய் நின்றனர்

மேற்கு வர்ஜீனியாவில் உள்ள கிராண்ட்வியூ பகுதியில் ஃப்ரீடம் மினிஸ்ட்ரீஸ் என்னும் தேவாலயம் அமைந்துள்ளது. அங்கு கடந்த மார்ச் 3-ம் தேதி நள்ளிரவு மின்சாரக் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவு என்பதால் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் கட்டடம் முழுவதும் தீபரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையான முயற்சியை மேற்கொண்டனர். ஆனால், அவர்களால் கட்டடத்தின் உள் நுழைய முடியவில்லை. தீயின் தீவிரம் குறைந்ததும் ஆலயத்தினுள் நுழைந்து தீயணைப்புப் பணிகளை மேற்கொண்டனர். அங்கு அவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. ஆலயத்தினுள் இருந்த ஒரு பைபிள்கூடத் தீயில் கருகிப் போகவில்லை. சிலுவைகளும் தீயில் கருகவில்லை.

Comments are closed.