புனித வாழ்வு பற்றிய புதிய திருத்தூது அறிவுரை ஏப்ரல் 09

இன்றைய உலகில் புனிதத்தன்மையுடன் வாழ்வதற்கு அழைப்பு விடுத்து, “Gaudete et exsultate” அதாவது, ‘அக்களியுங்கள் அகமகிழுங்கள்’ என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள, ஒரு திருத்தூது அறிவுரை, ஏப்ரல், 09, வருகிற திங்கள் பகல் 12.15 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

உரோம், புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவின் முதன்மைக் குருவும், உரோம் மறைமாவட்டத்தின் திருத்தந்தையின் பிரதிநிதியுமான பேராயர் ஆஞ்சலோ தெ தொனாத்திஸ் அவர்கள், திருத்தந்தையின் இந்த திருத்தூது அறிவுரையை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது

Comments are closed.