யாழ் மறைமாவட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இளையோர் ஆண்டின் சிறப்பு நிகழ்வு

ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், 2018 ஆம் ஆண்டு மறைமாவட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ” இளையோர் ஆண்டின் ” சிறப்பு நிகழ்வாக இளையோர் பேரணியும் கலை நிகழ்வுகளும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. மாலை 3.30 மணிக்கு குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் அருட்திரு அன்பு ராச (அ. ம.தி) அவர்களின் ஆரம்ப உரையுடன் பவனி ஆரம்பமாகி A – 9 பிரதான வீதியூடாக பவனி நகர்ந்து யாழ். புனித மரியன்னை பேராலயத்தை சென்றடைந்தது. அங்கு 5.00 மணிக்கு மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் இளையோருக்கான சிறப்புத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து இளையோர் சிறப்பிக்கும் கலைநிகழ்வுகள் பேராலய வளாகத்தில் அமைந்துள்ள திறந்தவெளி அரங்கில் மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது. கலை நிழ்வுகளின் ஆரம்பத்தில் மறைமாவட்ட கொடி, இளையோர் ஒன்றிய கொடிகள் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது. யாழ் மறைமாவட்ட கொடியை நிகழ்வின் பிரதம விருந்தினர் ஆயர் அருட் கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களும் மறைமாவட்ட இளையோர் ஒன்றிய கொடியை இறையோர் ஆணைக்குழ இயக்குனர் அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் அடிகளாரும் மறைக்கேட்ட இளையோர் ஒன்றியங்களின் கொடிகளை இளையோர் ஒன்றியங்களின் தலைவர்களும் ஏற்றி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளாரும் அருட்திரு எஸ். ஜே இம்மானுவேல் அடிகளாரும் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் கிராமிய நடனம், வில்லுப்பாட்டு, பாடல்கள், இளையோருக்கான சிறப்புரைகள் போன்றவற்றுடன் கடந்தவருடம் மறைமாவட்ட ரீதியாக நடைபெற்ற நாடகம், குறும்படம், குழப்பாடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களிலிருந்து 1000 அதிகமான இளையோர் பங்குபற்றியமையும்.

Comments are closed.