நீண்டதொரு விசுவாசப் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கும் மடுமாதாவின் ஆரம்ப இருப்பிடமான மாந்தைத் திருத்தலத்தின் லூர்து அன்னை திருவிழா

நீண்டதொரு விசுவாசப் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கும் மடுமாதாவின் ஆரம்ப இருப்பிடமான மாந்தைத் திருத்தலத்தின் லூர்து அன்னை திருவிழாவிற்கான மாலைப்புகழ் ஆராதனை  இடம் பெற்றுது.

வங்காலை தூய ஆனாள் ஆலய மக்கள் இன்றைய மாலைப்புகழ் வழிபாட்டைச் சிறப்பித்தனர்.

மாந்தைப் பங்கு மக்கள், பங்குத் தந்தை அருட்பணி.ச.மரியதாஸ் லீயோன் அடிகளாரோடு சேர்ந்து அனைத்து ஒழுங்குகளையும் செய்திருந்தனர்.

இன்றைய மாலைப் புகழ் ஆராதனையை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அடிகளார் தலைமையேற்று நடாத்தினார்

Comments are closed.