அமரர் சுவாம்பிள்ளை ஞானராஜ் அவர்களின் பிறந்த தின நினைவாக செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இன்று மதிய உணவு

அன்புக்கரங்கள் ஏற்பாட்டில் சுவாம்பிள்ளை ஞானராஜ் அவர்களின் பிறந்த தின  நினைவாக இன்று கிளி.செஞ்சோலை சிறுவர்இல்ல மாணவ,மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்கு நிதி உதவிய திருமதி ஞானராஜ்,செல்வி ஞானராஜ் நிசாமினி இருவருக்கும் செஞ்சோலை சிறுவர்கள் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. இந்த அன்பு உள்ளங்களுக்கு அன்புகரக்ங்கள் சார்பாகவும் நன்றிகளைத் தெரிக்கின்றோம்.

ந்த மலைகளும்

கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும்

அந்த வயல்வெளிகளும்

விம்மி விம்மி அழுது கொண்டிருக்கும்

உறவுகளின் அருமை

உயிர்வாழ்தலில் விளங்காதிருக்கிறது

அதிலும் உங்களுடைய அருமை

விளங்காமல் போனதின் வேதனை

வார்த்தைகளில் விளிக்கக்கூடியது இல்லைதான்

எனக்குத் தெரிந்து

மரணத்தை பார்த்துப் பயப்படவில்லை

நீங்கள் பயந்ததெல்லாம்

வாழ்க்கையைப் பார்த்துத்தான்

அதுவும்

உங்களுடைய வாழ்க்கையை அல்ல

உங்கள் பிள்ளைகளின்

உங்கள் சகோதர சகோதரிகளின்

உங்களைச் சுற்றியிருந்தவர்களின்

வாழ்க்கைக்காத்தானே பயந்தீர்கள்

இரவு பகல் பாராமல் உழைத்தீர்கள்

இப்போதும் கூட

மரணம் வென்றுவிட்டதாகச் சொல்ல முடியுமா

இல்லை

நீங்கள் ஒய்வெடுக்கச் சென்றுவிட்டதாகத்தான்

புரிந்து கொள்கிறேன்

போய் வாருங்கள் தந்தையே

கல்லறையில் உங்களைச் சந்தித்துக் கொள்வேன்

சு.ஞானராஜ் அவர்களின் ஆன்மா இறைவனிடத்தில் இளைப்பாறுவதாக ஆமென்.

 

 

தொடர்ந்தும் இவ்வாறான உதவிகளை எம்மிடம் இருந்து பல சிவர்இல்லங்கள்,முதியவர் இல்லங்கள் எதிர் பார்பதினால் நல்ல அன்பு உள்ளங்கள் எம்முடன் இனையுமாறு வேண்டி நிற்கின்றோம். அத்துடன் தொடர்ந்தும் எம்முடன் இனைந்து செயல்படுகின்றவர்களுக்கு இத்தருனத்தில் நன்றி. சு.ஞானராஜ் ஆன்மா இறைவனிடத்தில் இளைப்பாறுவதாக ஆமென்.

Comments are closed.