பொருளியல் விவகாரங்களில் பொறுப்புள்ளோருக்காகச் செபிப்போமாக
பொருளியல் விவகாரங்களில் பொறுப்புள்ளோருக்காகச் செபிக்குமாறு, ஏப்ரல் மாதச் செபக் கருத்து பற்றிய காணொளிச் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பொருளியலாளர்கள், புறக்கணிக்கும் பொருளாதாரத்தைத் துணிச்சலுடன் கைவிட்டு, புதிய பாதைகளைத் திறக்கும் வழிகளைக் கண்டுகொள்ள, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவர்களுக்காகச் செபிப்போம் என, அச்செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பொருளாதாரம், பணியாளர்களைக் குறைத்து, இலாபத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட இயலாது என்று கூறியுள்ள திருத்தந்தை, சமூகத்தில், மனிதர்களை மையப்படுத்தும் வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், சிந்தனையாளர்கள் மற்றும் ஏனையத் தலைவர்கள் காட்டும் பாதையைப் பொருளாதாரம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளா
Comments are closed.