பிலிப்பீன்சில் பேராலயத்தை தாக்கியவர்கள் சரண்

தென் பிலிப்பீன்சின் ஜோலோ நகர் பேராலயத்தை குண்டு வைத்து தாக்கிய நிகழ்வையொட்டி, அபு சாயிஃப் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த 5 பேர் சரணடைந்துள்ளனர்.

சனவரி மாதம் 27ம் தேதி பிலிப்பீன்சின் சுலு மாவட்டத்தில் உள்ள ஜோலோ நகரின் கார்மேல் நமதன்னை பேராலயத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி 23 பேரின் இறப்புக்கும், ஏறத்தாழ 100பேரின் படுகாயமடைதலுக்கும் காரணமான தீவிரவாதக்குழுவைச் சேர்ந்த 5 பேர், தற்போது காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர்.

பேராலயத்தின் மீது தாக்குதல் நடத்திய தற்கொலைப் படையைச் சார்ந்தவர்களை பாதுகாப்புடன் அப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாக ஒத்துக்கொண்ட இந்த ஐவரும் தற்போது சரணடைந்துள்ளனர்.

இந்த ஐவரும் சார்ந்திருக்கும் அபு சாயிஃப் தீவிரவாதக்குழு, இஸ்லாமியர்களை பெரும்பான்மையினராகக் கொண்ட ஜோலோ பகுதியின் காடுகளில் மறைந்திருந்து செயல்பட்டு வருகின்றது

Comments are closed.