மிஞ்சிய உணவை கொட்ட குப்பை தொட்டியை தேடாதே இவர்களை போல பசியில் உறங்கும் உயிர்களை தேடு
படைத்தவன் அலட்சியம்
பசியோடு நானிருக்க…
உடையும் கனக்கிறது
உணவில்லா நேரத்திலே…
விடைகள் இல்லாத
விதியோடு பிறந்ததால்
கிடைத்தது போதுமென்று
கிடந்ததை உண்ணுகிறேன்..!
உழைக்க வயதில்லாத
உருவத்தில் சிறியவன்..!
பிழைக்க வழியில்லை
பிச்சைதான் எடுக்கணும்..!
சிலைக்கு உணவூட்டும்
சிந்தனை உலகத்தில்..!
நிலைக்க தெரியாமல்
நித்தமும் சாகணும்..!
Comments are closed.