யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க சட்டத்தரணிகள் ஒன்றிய அங்குரார்ப்பண நிகழ்வு

யாழ்ப்பாணம் மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் கத்தோலிக்க சட்டத்தரணிகள் ஒன்றிய அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு யாழ். மறைக் கல்வி நடு நிலைய கேட்போர் கூடத்தில், பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்திரு மவுலிஸ் அடிகளாரின் ஒழங்குபடுத்தலில் யாழ்.மறைமவட்ட குரு முதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. சட்டத்தரணிகளின் பணிக்கு ஆன்மீக வலுக்கொடுப்பதாகவும், சட்டச்சிக்கல்கள் சார்ந்த விடையங்களில் மக்களுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு பொறி முறையை ஏற்படுத்துவதாகவும், திருச்சபை சார்ந்த விடையங்களில் சட்ட ஆலோசனை பெறும் ஒரு தளமாகும் பொதுநிலையினர் கழகத்தின் ஒர் அங்கமாகவும் இவ் ஒன்றியம் செயற்படவுள்ளது.

Comments are closed.