நற்செய்தி அறிவிப்புக்கு இரக்கப் பண்பு அவசியம்

நற்செய்தி அறிவிப்புக்கு இரக்கப் பண்பு இன்றியமையாதது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலத்தீன் அமெரிக்க ஆயர்களுக்கு ஆற்றிய உரையில் கூறியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார், வத்திக்கான் சமூகத் தொடர்பு துறையின் செய்திப் பிரிவு இயக்குனர், முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி.

பானமா திருத்தூதுப் பயணத்தில், திருத்தந்தையோடு பயணம் செய்யும் தொர்னியெல்லி அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலத்தீன் அமெரிக்க ஆயர்களைச் சந்தித்த நிகழ்விலும் கலந்துகொண்டார்.

இலத்தீன் அமெரிக்க ஆயர்களுக்கென தயாரித்து வைத்திருந்த உரையை ஆற்றுகையில், அந்த உரையில் இல்லாத கருத்துக்கள், குறிப்பாக, இரக்கப்பண்பு குறைபடுவது, கத்தோலிக்க ஊடகத்திலும் இப்பண்பு குறைபடுவது பற்றி, திருத்தந்தை பேசினார் எனவும், தொர்னியெல்லி அவர்கள், வத்திக்கான் வானொலி நிருபர் ஜான் லோவெட் அவர்களிடம்

தெரிவித்தார்.

திருஅவையில், கிறிஸ்துவின் பரிவன்பு, மைய இடத்தை இழந்துள்ளது என திருத்தந்தை கூறினார் எனவும், திருத்தந்தையின் வார்த்தைகள் புகைப்படமாக உள்ளன எனவும், இது எல்லாரும் பார்ப்பதற்கு ஏற்ற தளமாக உள்ளது எனவும், தொர்னியெல்லி அவர்கள், கூறினார்.

சில கத்தோலிக்க ஊடகங்களும், எல்லாரையும், எல்லாவற்றையும் தீர்ப்பிட விரும்புகின்றன, அவை, இரக்கத்தையும், பரிவன்பையும் பயன்படுத்துவதில்லை  என்றும், இது இயேசுவின் பாங்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதால், இது பிரச்சனை என்றும் கூறிய அவர், ஒவ்வொருவரும் தங்களின் பணியைத் திறம்படச் செய்தால், இப்பிரச்சனைக்குத் தீர்வு கிட்டும் என்றும், தொர்னியெல்லி அவர்கள், தெரிவித்தார்

Comments are closed.