இரக்கத்தின் மறைபணியாளர்களுடன் திருத்தந்தை

இயேசு எப்போதும் நம்மருகே இருக்கிறார் என்பதை அறிந்தவர்களாய், அவரது உயிர்ப்பு தரும் மகிழ்வில் நாம் முன்னோக்கிச் செல்வோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் ஏப்ரல் 5, இவ்வியாழனன்று பதிவாகியிருந்தன.

மேலும், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் உலகெங்கும் அனுப்பிவைக்கப்பட்ட இரக்கத்தின் மறைபணியாளர்கள், இவ்வாண்டு, ஏப்ரல் 8ம் தேதி முதல் 11ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறும் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர் என்று, புதிய வழி நற்செய்தி அறிவிப்புப் பணி திருப்பீட அவை அறிவித்துள்ளது.

ஏப்ரல் 8, சிறப்பிக்கப்படும் இறை இரக்கத்தின் ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் தலைமையேற்று நிகழ்த்தும் திருப்பலியில், இரக்கத்தின் மறைபணியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

இதைத் தொடர்ந்து, உரோம் நகரில் நடைபெறும் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ளும் இப்பணியாளர்கள், ஏப்ரல் 10, வருகிற செவ்வாய், புனித பேதுரு பசிலிக்காவில் நடைபெறும் ஒரு சிறப்புத் திருப்பலியிலும் பங்கேற்கின்றனர் என்று புதிய வழி நற்செய்தி அறிவிப்புப் பணி திருப்பீட அவை அறிவித்துள்ளத

வத்திக்கான்

Comments are closed.