ஆனந்தபுரம் கிராமத்தில் அன்புக்கன்னியர் சபை அருட்சகோதரிகளுக்கான இல்லம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

இரணைப்பாலைப் பங்கில் அமைந்துள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் அன்புக்கன்னியர் சபை அருட்சகோதரிகளுக்கான இல்லம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இரணைப்பாலை பங்குந்தந்தை அருட்திரு லியோ ஆம்ஸ்ரோங் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இதில் அன்புக்கன்னியர்சபையின் வடமாகாண ஆலோசகர் அருட்சகோதரி யோகராணி முல்லைமறைக்கோட்ட குருமுதல்வர் அருட்திரு ஜோர்ச் ஏனைய அருட்த்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பங்குமக்களென பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

Commission For Social Communication

Comments are closed.