கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயர் ஜெயகோடி

இலங்கையின் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராக, அருள்பணி Jayakody Aratchige Don Anton Jayakody அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 4, இப்புதனன்று நியமித்துள்ளார்.

இதுவரை இம்மறைமாவட்டத்தின் துணை ஆயராகப் பணியாற்றி வந்துள்ள ஆயர் Vincent Marius Joseph Peiris அவர்கள் பணிஓய்வு பெற விரும்பி அனுப்பிய விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, அருள்பணி Jayakody அவர்களை புதிதாக நியமித்துள்ளார்.

1958ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி, Pamunugama என்ற ஊரில் பிறந்த Jayakody அவர்கள், 1985ம் ஆண்டு அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

Halpe, Welivita உட்பட, பல்வேறு பங்குத்தளங்களில் பொறுப்பாளராகப் பணியாற்றிய Jayakody அவர்கள், அருள்பணியாளர்களை உருவாக்கும் பயிற்சி இல்லங்களிலும் பணியாற்றியுள்ளார்

Comments are closed.