1923ம் ஆண்டுக்குப்பின், துருக்கியில் கிறிஸ்தவக் கோவில்

People demonstrate outside Ataturk international airport during an attempted coup in Istanbul, Turkey, July 16, 2016. REUTERS/Huseyin Aldemir

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் மாவட்டத்தில் சிரிய ஆர்த்தடாக்ஸ் ஆலயம் புதிதாகக் கட்டப்படவுள்ளதென மாவட்ட அரசுத்துறை, சனவரி 8, இச்செவ்வாயன்று அறிவித்ததாக, ஆசிய செய்தி கூறியுள்ளது.

என்ற இடத்தில் கட்டப்படும் இக்கோவில் 700 பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்படும் என்றும், இக்கோவிலின் கட்டுமானப் பணிகள் ஈராண்டுகளில் நிறைவடையும் என்றும் Bakirkoy நகர மேயர்  அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

துருக்கி நாடு, 1923ம் ஆண்டு, ஒரு குடியரசாக மாறியபின், கட்டப்படும் முதல் கிறிஸ்தவக் கோவில் இது என்பதும், இக்கோவிலைக் குறித்த செய்தியை, 2015ம் ஆண்டு, பிரதமராக இருந்த Ahmet அவர்கள் அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கன.

சிரியாவில் போர் துவங்கியதிலிருந்து, அந்நாட்டிலிருந்து வெளியேறிவரும் கிறிஸ்தவர்களில் ஆயிரக்கணக்கானோருக்கு துருக்கி குடியரசு, புகலிடம் அளித்து வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Comments are closed.