கிறிஸ்தவனாக இருப்பதைவிட கிறிஸ்துக்குள் இருப்பதையே விரும்புகிறேன் – இமான் அண்ணாச்சி

தூ த்துக்குடி மாவட்டத்தில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் பிறந்த நான் இந்த அளவு வாழ்க்கையில் முன்னேறி, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு ஓரளவு அறியப்பட்ட மனிதனாக இருப்பதற்குக் காரணம் இயேசுகிறிஸ்து மீதான எனது விசுவாசமும் பக்தியும்தான்.
நம்முடைய தேவைகளை தேவன் நம்மைவிட அதிகம் அறிந்திருக்கிறார்’ என்று பைபிள் கூறுகிறது. என் நண்பர்களில் பலர் குறைபட்டுக்கொள்வதுண்டு. கடவுள் என் பிரார்த்தனையைக் கேட்கவில்லையே’ என்று சில நண்பர்கள் என்னிடம் வருத்தப்படுவர். அதன் பொருட்டு கடவுளை நிந்திப்பவர்களும் உண்டு.

அதில் ரகசியம் என்னவென்றால், கடவுள் நம் பிரார்த்தனைகளை உடனே கேட்பார் என்று சொல்லிவிட முடியாது.
என் பிரார்த்தனைகளை நிறைவேற்றும்படி நான் நாற்பது ஆண்டுகளாக வேண்டி இருக்கிறேன். ஆனால், அவர் அதற்குக் குறித்த நாளும் நேரமும் வரும்போதுதான் அப்பிரார்த்தனைகளை நிறைவேற்றினார். இன்று எனது பெரும்பாலான பிரார்த்தனைகளைக் இயேசுகிறிஸ்து நிறைவேற்றியிருக்கிறார். நான் வெளி உலகத்துக்குத் தெரிய ஆரம்பித்து கிட்டதட்ட ஆறு ஆண்டுகள்தான் ஆகியிருக்கிறது. இந்த ஆறு ஆண்டுகளில் எனக்கு ஒரு டூ-வீலர், ஒரு கார் இருக்க ஒரு இடமென்று வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் இயேசு கிறிஸ்து எனக்குத் தந்திருக்கிறார். அதனால்தான் சொல்கிறேன் இறை பக்தியில் தொடர் பிரார்த்தனைகளும் மன உறுதியும் முக்கியமான ஒன்று.

Comments are closed.