மறையாசிரியர் பயிற்சிக்கான முன் ஆயத்த வகுப்பு
2019 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மறையாசிரியர்களுக்கான மூன்று (3) மாத வதிவிடப் பயிற்சிக்கு தோற்றவிருக்கும் மறைஆசிரியர்களின் தகமையை உயர்த்தும் நோக்குடன், 2018 கார்த்திகை 18ம் திகதியிலிருந்து 24ம் திகதி வரை ஒருவாரகால துரிதபயிற்சி (Foundation Course) யாழ்ப்பாணம் மறைக்கல்வி நடுநிலையத்தில் நடைபெற்றது. இப்பயிற்சில் யாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்துறை மறைக்கோட்டங்களைச் சேர்ந்த 28 பயிற்சியாளர்கள் பங்குபற்றினார்கள். இவர்களுக்கு திருவிவிலியம், திருவழிபாடு, திருஅவை, திருவருட்சாதனங்கள், கத்தோலிக்க திருமறையின் அடிப்படை கொள்கைகள் பற்றிய பகுதிகளில் துரித ஆயத்த வகுப்புகள் நடாத்தப்பட்டன. அத்துடன் மறையாசிரியர்களுக்கான தலைமைத்துவம், தியானம், வழிபாடு, கலைவழி மறைக்கல்வி, குழுமவாழ்வு பற்றிய பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
பயிற்சியின் இறுதியில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் அருட் கலாநிதி யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களுடனான சந்திப்பு நடைபெற்றது.
அன்றைய நாள் சிறப்பு நிகழ்வாக துரித பயிற்சியில் பங்குபற்றிய மறையாசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெறறது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் கலந்து சிறப்பித்ததுடன் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். குருமுதல்வர் அவர்கள் தனது உரையில், கிறிஸ்தவபாடம் கற்பிக்கப்படாத பாடசாலைகளில் எத்தனையோ கத்தோலிக்க மாணவர்கள் கற்கின்றபடியால் பங்கு மறைப்பாடசாலைகளே மறைக்கல்வி கற்கும் இடமாக இருக்கிறது எனவும் இதனை கருத்தில்கொண்டு மறைஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் பணியில் அர்ப்பணிப்போடு கற்பிக்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் மறைஆசிரியர் பணிக்கென அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கு வயதில்லை கிடையாது என்பதனையும் சுட்டிகாட்டி இவ்வுண்ணதமான பணியில் ஈடுபட்டுள்ளவர்களை பாராட்டினார். இந்நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்பணி பெனற் அவர்களின் நெறிப்படுத்தலில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது
Comments are closed.