சரித்திரங்கள் வருங்கால சந்ததியினருக்கான ஏடுகளில் எழுதப்படவேண்டும்,  எனும் உன்னத நோக்கத்திற்காக,  பழைய பல ஏடுகளில் இருந்து ஆய்வுசெய்யப்பட்டு தொகுக்கப்பட்டது.

16ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம்,  யாழ்குடா பிரதேசங்கள்;,  மாந்தை பெருநிலப்பரப்பு,  மன்னார்த்தீவு,  போன்றன யாழ்ப்பாண இராட்;சியமாக விளங்கின. அக்காலத்தில் யாழ்ப்பாண இராட்;சியத்தை சங்கிலியன் மன்னன் ஆண்டு வந்தான்.  இந்தியாவின் தென்கரையோரங்களில் வசித்து வந்த கிறீஸ்தவர்கள் யாழ்ப்பாண இராட்;சியத்தில் கிறீஸ்;துவைப் பற்றி அறிந்திராத மக்களுக்கு வேதவசனங்களை சிறிது சிறிதாக போதிக்கலாயினர். இவர்கள் மூலமாக தூய பிரான்;சிஸ்கு சவேரியாரின் வேதம் போதிக்கும் ஆற்றலையும்,  புதுமைகளையும்,  கேள்வியுற்ற மன்னார் வாசிகள்,  1544 இல் இப்புனிதரை மன்னார்த் தீவுக்கு,  வருமாறு ஓர் தூதுக்குழுவினர் மூலமாக ஒலை அனுப்பினர்.

அவர் சவேரியார் திருவாங்கூரில் சமய அலுவல்களில் மும்முரமாக இருந்த காரணத்தினால் தமது நாமம் பூண்ட ஓர் குருவானவரை யாழ்ப்பாண இராட்சியத்திற்கு மன்னார் ஊடாக அனுப்பி வைத்தார். சவேரியார் குருவானவர் மன்னார் தீவுக்குகுறிப்பாக பட்டிமுக்கு வந்து,  பலரை மனம் திருப்பி சத்திய வேதத்தை போதித்து மக்களின் மனதை வென்றமையினால் 600 இற்கும் அதிகமான மக்கள்; இயேசுவில் நம்பிக்கை வைத்து வாழ்ந்த வேளையில்,  யாழ்ப்பாண அரசனான சங்கிலியனால் மீண்டும் மதம்மாற நிற்பந்திக்கப்பட்டு மறுத்தவர்கள் சிரச்சேதம் செய்யப்பட்டார்கள். (ஞானப்பிரகாசியார்: 1925)1999: பக்;-225.

1582 இல் இராஜ பரம்பரையைச் சேர்ந்த இளம் பெண் டொன்னா கத்தரீனா கிறீஸ்த்தவ மதத்தைத் தழுவினார்,  மன்னாருக்கு வந்து சிறிதுகாலம் வேதத்தைப் பரப்பினாள். இவரின் தந்தையின் பெயர் கறளியத்த பண்டாறா,  கண்டி அரசனான,  இவர் பின்பு இராஜசிங்க அரசனால் முறியடிக்கப்பட்டார். டொன்னா கத்தரீனா,  மன்னார் மக்களின் எளிய வாழ்வை விரும்பியவள். கபிரியேல் கொலோசா என்பவரின் விட்டில் வசித்து வந்தார். கிறீஸ்த்தவ மக்களுக்கு பெரிதும் உதவி செய்தவர். இவரின் தந்தையும்,  தாயும் கிறீஸ்த்தவ மதத்தைப் பின்பற்றி இறுதியில் திருகோணமலையில் இறந்தனர். இருப்பினும் இரத்தம் சிந்தப்பட்ட பட்டித்தோட்டம் மற்றும் தோட்டவெளி கிராமங்களில் புது வேகத்துடன் கிறீஸ்த்தவ வேதம் மீண்டும் புத்துயிர் பெற்றது. இதனால் 1583 இல் 26 கோவில் பங்குகளில் 43ஆயிரம் கிறீஸ்தவர்கள் மறைந்திருந்து கிறீஸ்;துவிற்கு சாட்சிகளாய் விளங்கினார்கள். (ஞானப்பிரகாசியார் 25 வருட கிறீஸ்த்தவர்களுக்கு),  பக்-225

இவ்வாறு ஏற்பட்ட 26 கோவில் பங்குகளில் மன்னார்,  தள்ளாடி,  திருக்கேதீஸ்வரத்தில் அமைந்துள்ள மாந்தை மாதா ஆலயமும் (தற்போதைய மாந்தை லூர்த்துக்கெபி சிற்றாலயமும); அடங்கும். செபமாலை மாதாவென்று தற்போது அழைக்கப்படும் மருதமடு மாதாவின் உண்மையான சுரூபத்தின் ஆதி இருப்பிடம் மாந்தை பிட்டியில் அமைந்துள்ள  தற்போதைய லூர்த்துக்கெபி கோவிலடியாகும் 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்  மன்னாருக்கு வந்தபோது மாந்தை பட்டினமும்,  திருக்கேதீஸ்வர கோவிலும் பாழ் அடைந்திருந்ததாகவும் 1560 இல் மன்னார் கோட்டையை டி.கொண்ஸ்ரன்டைன்,  டீ.பிறாங்கன்ஸ் என்பவர் தலைமையில் கட்டுவதற்கு இங்கிருந்து முருகை கற்கள் எடுத்துச் செல்லப்பட்டது. (Chronical page-28)

 

1658 இல் மாந்தையில் உள்ள ஆரோக்கிய மாதாகோவில் டச்சுக்காரரின் ஆட்சியில் விழுந்ததினால் அங்குள்ள கிறீஸ்;தவர்கள்,  மாதாவின் சுரூபத்தை வன்னிக்கு எடுத்துச்சென்றதாகவும்,  1670 இல் மாந்தைக்கோவில் டச்சுக்காரருக்கு கூட்டம் கூடும் இடமாக மாற்றப்பட்டதாக யாழ் அரச அதிபர்,  திரு H.நெவில் (NEVILL) தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்,  அத்துடன் 1670 இல் டச்சுக்காரர் பதித்த நிலக்கல்லை தான் கண்டெடுத்ததாக கூறியுள்ளார். (Codex Madhu 1888, Cronicle Madhu அத்தியாயம் 3 பக்-26)

1669ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைத்தீவை ஒல்லாந்தர் கைப்பற்றியபோது,  மன்னார் தீவில் வாழ்ந்த கிறீஸ்த்தவர்களுக்கு எதிராக ஓரு கொடூரமான வேதகலாபனை ஆரம்பமாகியது. வண பிதா,  மெய்சட் O M I   (MASSIET) என்பவர் மடுத்தேவாலய சரித்திரப் புத்தகத்தில் (CODEX –HISTORICUS)  1886 இல் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“1, 670 இல் மாந்தையில்” ஆரோக்கிய அன்னை எனும் பேரில் ஓர் கோவில் இருந்ததாகவும் அதை வண பிதா பெற்ரோ டீ பெற்றாங்கோ 1614 இல் கட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். (( Our lady of Good Health built by. Fr. PEDRO DE BETANCO) Chronicle Chapter, II page 20 th second para பல இந்தியக் குருக்கள் வள்ளம் மூலம் நாட்டைவிட்டு வெளியேறியமையினால்,  மன்னார்;,  மாந்தை,  ஆகிய இடங்களில் வாழ்ந்த கிறீஸ்தவர்கள் வேதத்தில் தளைத்திருந்த அக்காலத்து சங்கீத்தான்,  உபதேசியர்,  போன்றவர்கள்; தலைமையில் இரவில் மறைவாக சிறு சிறு குழுக்களாக ஒன்று கூடி மெழுகுவர்த்தி உதவியோடு வேதத்தைப் பரப்பினர். இவர்கள் வேதகலாபனையிலிருந்து கிறீஸ்தவ மதத்தையும்,  மக்களையும்,  காப்பாற்றிக்கொள்ள செபமாலையை ஓர் ஆயுதமாக எடுத்துக்கொண்டனர்.

1670ல் மாந்தை சிற்றாலயத்தைச் சேர்ந்த பக்தியுள்ள 20 குடும்பங்கள் ஒன்றுகூடி,  மாந்தையில் வீற்றிருந்த செபமாலைமாதா சுரூபத்தை பாதுகாக்கும் முகமாக ஆலோசனை செய்யப்பட்டது.(Chronical Madhu-28) 1686 இல் வண.பிதா ஜோசவாஸ் முனிந்திரன் கோவாவி;ல் இருந்து கடல் வழியாக பிரயாணம் செய்தபோது அத்தோணி புயலில் அகப்பட்டு மன்னார் கரையை அடைந்ததாகவும்,  இலங்கையில் வேதகலாபனை நடந்ததினால் பிச்சைக்காரர் வேடத்தில் மாறுவேடம் பூண்டு நம்பிக்கையுள்ள கிறீஸ்த்தவ வீடுகளில் தரித்து நின்றதாகவும்,  அவர் தன்னுடன் பூசைக்கல்லையும்,  கதிர்பாத்திரத்தையும் எடுத்துச்சென்றதாகவும் சரித்திரம் கூறுகின்றது. (வணபிதா கி. பெரேரா எழுதிய ஜோசவாஸின் சுயசரித்திரம் பக் – 44-47 CRONICAL MADHU PAGE – 87)

இதன் பயனாக இவ் 20 குடும்ப அங்கத்தவர்கள் மாந்தையில் நிலை கொண்டிருந்த செபமாலைமாதா சுரூபத்தை ஒல்லாந்தரிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு,  அதனை எடுத்துக்;கொண்டு கால் நடையாக முதலில் கள்ளியட்டைக்காட்டில் சிறிதுகாலமும் அக்காலத்தில் கண்டி,  இராட்ச்சியத்திற்குட்பட்ட அடர்ந்த யானை,  புலி,  காட்டினுடாக இராமேஸ்வரத்தில் இருந்து கண்டிக்குச் செல்லும் முன்னைய இராஜ பாதை,  (தற்போதைய A 14 பாதை) மூலமாக கண்டி அரசனின் சுங்கச் சாவடியென்னும் புராதான குளத்திற்கு அருகேயுள்ள கிராமமொன்றிற்கு (தற்போதைய தட்சணாமருதமடு கிராமம்;) தமது நீண்ட பயணத்தை செபமாலைமாதா சுரூபத்துடன் சென்றடைந்தனர்.

அதன்பின் 2கி.மீ தூரத்திலுள்ள மருத மரங்களினால் சூழப்பட்ட சிறிய குளக்கரையைக் கொண்ட மருத கிராமத்திற்கு சுரூபத்தை எடுத்துச்சென்று வணங்கினர். அங்கு மாந்தையின் பரம்பரை கிறீஸ்தவர்கள் முதல்முறையாக திருச்சிலுவையை நட்டு செபமாலைமாதா சுரூபத்தை வைப்பதற்காக ஓலைகளினால் வேயப்பட்ட சிறு கொட்டிலை அமைத்து தமது வேதவைராக்கிய வித்தை விதைத்ததாக அறியப்படுகின்றது. (ஞானப்பிரகாசியார் 225 மடு-272-276) அக்காலப்பகுதியில் யாழ்ப்பாண பட்டணத்தில் வேதகலாபனை காட்டுத்தீ போல் நாலா பக்கமும் பரவிக்கொண்டிருக்க,  யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்து வேதத்தில் வைராக்கியம் நிறைந்த கிறீஸ்தவ மக்கள் இடம்பெயர்ந்து- சுமார் 700 கிறீஸ்த்தவர்கள்- பூநகரிகடல் ஏரியைக் கடந்து வன்னிக் காட்டில் நுழைந்து புதுமையான விதத்தில்,  செபமாலை மாதாவின் சிறுகுடிலை நோக்கி தேவனால் அழைத்து வரப்பட்டனர்.

யாழில் இருந்த ஏழு இந்தியக் குருக்களும்,  700 கிறீஸ்த்தவர்களும்,  பூநகரி கடல் ஏரியைக் கடந்து,  காட்டு வழியாக நடந்து மன்னாரிலுள்ள,  மடுத்தேவாலயத்தை வந்து சேர்ந்ததாக சான்றுகள் உள்ளன. ( CODEX MADHU 1968 இல்)கானகத்தின் நடுவே அமைதியும்,  சமாதானமும் நிறைந்த மருதமடு;  செபமாலை மாதாவின் பாதகமலங்களில் மாந்தை கிறீஸ்தவர்கள் அமைதியாக ஒவ்வொரு இரவும் செபமாலையை கரங்களில் ஏந்தி தம்மைக் காப்பாற்றுமாறு மாதாவை வேண்டினர். இவர்கள் மத்தியில் ஓர் போர்த்துக்கேய தளபதியின் மகளான லேனா என்பவளும் வந்திருந்தாள்,  இவள் கிறீஸ்துவின் மேல் அலாதியான பக்தியும்,  ஏனையோருக்கு முன்மாதிரியுமான சீவியத்தையும் வாழ்ந்து வந்தவள். யாழ் கிறீஸ்;தவர்கள் இவளை “சந்தலேனா” அல்லது,  “அர்ச்சேஸ்ட லேனா” என அழைத்து வந்தனர். யாழ் கிறீஸ்தவர்களும்,  மாந்தை கிறீஸ்தவர்களும்,  கானகத்தின் நடுவே தேவனின் அருளினால் ஒன்று சேர்க்கப்பட்டதை நாம் வாழ்நாளில் கண்ட பரவசம் என அக்கால கிறீஸ்த்தவர்கள் அறிவித்தார்கள். (Chronical chptr-31-32)

காலகதியில் லேனா எனப்படும் அப்பெண் மடுவில் இருந்த சுங்க அதிகாரியை மணம் புரிந்ததால். இவள் மாதாவின் பெயரால் தமது செல்வாக்கை பாவித்து மருதமடு மாதாவிற்கு சிறு கோவிலைக் கட்டுவித்தாள். வங்காலையைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் அந்தோனியோ டீ மெலோ (Andonio de Mello) மடுக்கோயில் சம்பந்தமான வழக்கில் (வழக்கு இல.6871) – 1875 இல் சாட்சியம் பகர்கையில் லேனா என்பவள் மடுக்கோவிலைக் கட்டியதாக இவர் சாட்சியம் கூறியுள்ளார்.(the Cronicle of Madhu) chapter IV page 32 ,first para

இஇச்செயலுக்காக அக்காலத்து கிறீஸ்தவர்கள் அவ்விடத்தை “சீலேனா மருதமடு” என்று அழைக்கலாயினர். அது இந்நாள் வரைக்கும் இப்புனித பூமிக்கு ஓரு பெயராக விளங்கி வருகின்றது.

கானகத்தில் அமைந்துள்ள மருதமடு அன்னையின் வருகையை தொடர்ந்து அதன் சுற்று வட்டத்தில் விசசர்ப்பங்களின் தீண்டுதல்கள்,  வெகுவாக குறைவடைந்தன. காலப்போக்கில் மடுமாதாவின் தலத்து மண்ணை மக்கள் நம்பிக்கையுடன் எடுத்துச் சென்று தமது தீராத நோய்களை தீர்த்ததாக சரித்திரம் சொல்லுகின்றது. இச்செயல் இன்றுவரை நிலைத்து நிற்கின்றது. வண பிதா றோமமிஸ் கிர்ச்சென்;(FR. ROMMESS KIRCHEN) 1931 இல் எழுதிய புத்தகத்தில் கோவாவை சேர்ந்த ஓர் பரிசுத்த சுவாமி மடுக்கோவில் வளவில் புதைக்கப்பட்டதாகவும்,  அவரை கிறீஸ்த்தவர்கள் “சம்மனசு சுவாமி” என அழைத்ததாகவும்,  கூறப்படுகிறது. அவரின் பரிசுத்தமான வாழ்க்கையினால் அவர் வாழும்பொழுதே மக்கள் அவரை புனிதர் என அழைத்தனர். இவரை புதைத்த இடத்தின் மண்ணை பக்தர்கள் எடுத்துச்சென்று தமது குரோத வியாதிகளுக்கு மருந்தாக பாவித்ததார்கள். (1697 – 1721 காலத்தில் வணபிதா பெற்ரோ பிராடோ FR. BEDRO FRERDO) முதல் முறையாக இம்மண்ணை ஆசீர்வதித்ததாக ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது,  (CRONICAL MADHU PAGE 36).

1656 தொடக்கம் 1686 வரை டச்சுக்காரரின் கொடுங்கோல் ஆட்சியினால் இலங்கையில் குருக்கள் ஒருவரும் இருக்கவில்லை. அக்காலத்தில் விசுவாசமுள்ள பொது நிலையினரே வேதத்தை வளர்த்து வந்தனர். பின்பு கோவையில் இருந்து யோக ஓறேட்ரோரியன் சபையைச்சேர்ந்த அருளாளர் யோசப்வாஸ் அடிகளார் அதன்பின் சில தியான சம்பிரதாய குருக்களும்,  இலங்கைக்கு வந்து சில கத்தோலிக்க மீசாம்களை ஆரம்பிக்கத் தொடங்கினர். 1695 இல் இலங்கைக்கு வந்த தவமுனிவர் பேதுரு பெற்றாஸ் என்பவர் மடுவிற்கு பொறுப்பாளராக இருந்தார்,  1706 இல் மருதமடு தலை மீசாமாகவும்,  பேராலயமாகவம்,  விளங்கியதாக சரித்திரம் கூறுகின்றது.

வணபிதா யோசப்வாஸ் 28-02-1697 இல் வணபிதா பெற்றோ பிராடோவை மாதோட்ட பங்கிற்கு (மன்னார்,  வன்னி,  பூநகரி,  யாழ்) பொறுப்பாக நியமித்தார். இவரின் காலத்தில் யாழ்ப்பாணத்தை பிடிப்பதற்காக சாத்தானுக்கு உயிர்களை பலி கொடுப்பதுண்டு. இவ்மூடச்செயலை வணபிதா பெற்றோ பிராடோ முறியடித்து கத்தோலிக்க விசுவாசிகளின் துணைகொண்டு யானைகளைப் பிடித்து தொழில் செய்ததாக சான்றுகள் பகர்கின்றன,  (ஒரோட்டோரியன்; பக்-10 வணபிதா பெற்றோ பெராடோ பக்-100 Cronical madhu பக்-47)

முதல் தடவையாக ஆவணி 8 ஆம் திகதி 1705 இல் ஆயிரக்கணக்கான மடு யாத்திரியர்கள்,  இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து,  மடுத்திருவிழாவில் கலந்துகொண்டனர்,  வணபிதா ஜோசவாஸ் தலைமையில் திருப்பலிப்பூசை நடைபெற்றது.அதன்பின் எட்டு குருக்கள் ஒன்றுகூடி,  ஆவியின் வேண்டுதலின் பின்,  இலங்கையின் திருச்சபையை எட்டாக பிரித்து,  அதை நிர்வகிக்கும் பொறுப்பை எட்டுக் குருக்களுக்கு கையளித்தனர். இதில் ஒன்றாக வண பிதா. பெற்ரோ பெராடோ என்பவர் சீலேனா மருதமடுவிற்கும்,  சகல மாதோட்ட மறைமாவட்டத்திற்கும்,  பொறுப்பை எற்றுக்கொண்டார். (பரப்பாங்கண்டல் பெரிய கோவிலை மையமாக கொண்ட கிராமங்களுக்கு)

மேலும் வணபிதா,  ஜோக்கிம் கொண்சல்வாஸ்,  (JACOME GONSALVAZ)  மன்னார்,  அரிப்பு,  முசலி,  இலுப்பைக்கடவை,  புளியங்குளம்,  கோவில்குளம்,  தம்பட்ட முறிப்பு,  வண்ணாகுளம்,  பல்லவராயன்கட்டு,  இலுப்பைக்குளம்,  ஆவரங்குளம்,  அதனோடு அண்டியள்ள கிராமங்களுக்கும்,  நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். (ஊhசழniஉயடந – ஊயவாழடயைட in துயககயெ லு.கு. சுநச. குச. ஞானப்பிரகாசியார்).16-01-1711 இல் ஓரு வெள்ளிக்கிழமை இரவு,  வணபிதா ஜோசவாஸ் என்பவர்,  தனது 61 வது வயதில் கண்டியில் காலமாணார்,  இவர் வகித்த தலைமைப் பொறுப்பிற்கு வணபிதா ஜோசப் மென்சிஸ் (Fr. JOSEPH MENEZES) என்பவர் நியமிக்கப்பட்டார்.

 

ஆங்கிலேயர் இலங்கைக்கு வந்ததும்,  இலங்கை கத்தோலிக்கர்களுக்கு விடிவு காலம் ஆரம்பமாகி வேதகலாபனைகள் சற்று ஒழிந்து கத்தோலிக்க மதம் மீண்டும் தளைத்தோங்கத் தொடங்கியது. இலங்கையின் நாலாபுறத்திலும் இருந்து கானகத்தில் வீற்றிருக்கும் மருதமடு அன்னையை காண பலபக்தர்கள் நூற்றுக்கணக்கில் வரத்தொடங்கினர்.

கோவிலில் இடமின்மையை கண்ணுற்ற,  மன்னார் வழக்காடு கோட்டில் (நீதிமன்றில்) சக்கிடுத்தாராகவிருந்த பறங்கியரான மோஜீஸ் என்பவர். 1823 இல் ஒரு சிறுகுடிசைக் கோவிலை களிமண்ணினால் கட்டிவித்தார்,  இது குதிரை லாடன் வடிவத்தில் மூன்று பக்கச் சுவர்களுடன் 8 அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்தது. அதன் நடுவே பீடத்திற்காக ஒரு சிறுமேசை அமைக்கப்பட்டிருந்தது. கோவிலுக்கு பின்புறத்தில் குருமாருக்கென சிறு அறை இருந்தது.சிறிது காலத்தின்பின் இந்தியாவிலுள்ள கோவை குருமாரின் சபை கலைக்கப்பட்டு கிறீஸ்தவ மதம் வளர்;ச்சி குன்றியது.

சுமார் 300,  அண்டுகளாக இலங்கைத் திருச்சபை இந்தியாவிலுள்ள கொச்சின் மறைமாவட்டத்தினால்,  நிர்வகிக்கப்பட்டு வந்தது,  1834-12-03ம் திகதி 16ம் கிறகோரி பாப்பாண்டவரினால் இலங்கை திருச்சபை,  கொச்சினில் இருந்து பிரிக்கப்பட்டு தனிமறை நாடாக பிரகடனப்படுத்தப்பட்டு ஒரட்டேரியன் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. கோவாவில் இருந்து வந்த வண.பிதா பிரான்சிஸ் சவேரியார் இலங்கைக்கு முதலாவது விக்கார் அப்போஸ்த்தலிக்கராக நியமிக்கப்பட்டார். இவர் கிறீஸ்த்துவிற்கு சாட்ச்சியாய் பெரும் சவாலுடன் இலங்கையில் சேவை புரிந்து இறுதியில் 1835 இல் காலமாணார்.

1823 இல் திரு மொய்ஸ் மன்னார் நீதிமன்ற முதலியார் களிமண்ணினால் ஆன சிறு    கோவிலை கட்டினார். இதன் ஆவணங்கள் நொச்சிகுளம் மாதா கோவிலில் உள்ளதாக அறியப்படுகின்றது. மக்கள் தங்குவதற்காக வதிவிடம் ஒன்றிற்கு 9-6-1928 அடிக்கல் நாட்டப்படடது. பாலம்பிட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட செங்கல்லினால் 1903இல் வண.பிதா ஓலிவ் அவர்களினால் குருக்கள் தங்குவதற்கு அறையும்,  குசினியும் கட்டப்பட்டது. Fr. Goden முதலாவது கிணத்தைக் கட்டினார். Fr. Gour  2வது கிணத்தைக் கட்டினார். Fr. Massit  சிறிய தேவாலயத்தைக் கட்டினார். அங்கு எழுந்தேற்றம் பண்ணி வைக்கப்பட்டது. கோவிலுள்ள மரத்தாலான தூண்கள் மாங்குளம் காட்டிலிருந்து திருகோணமலை வீதி வழியாக கொண்டுவரப்பட்டது. ஆதில் இரண்டு பலா மரங்களும்,  மூன்று முதிரை மரங்களும்,  ஏனையவை பாலை மரங்களாகவும் இருந்தன. மாதாவின் கெபி கட்டுவதற்கு நீர்கொழும்பைச் சேர்ந்த திருமதி லூமிஸ் என்பவர் முதலில் பண உதவி செய்திருந்தார்.(xxv yesrs Catholic progress madhu and vanni parish page 272 – 276)

அதன்பின் வண.பிதா ஜோசவாஸ் முனிந்திரர் இலங்கையின் விக்கார் ஜென்றலாக நியமிக்கப்பட்டார். இவரின் அயராத முயற்சியினால் மேலும் ஜந்து மிசனரி குருக்கள் கோவாவில் இருந்து 14-07-1705 இல் இலங்கைக்கு வந்தனர். அவர்கள் வணபிதா ஜோசப் டீ. ஜேசு மேரி,  வணபிதா ஜேகம் கொண்சல்வாஸ்,  வணபிதா மானால் டீ. மிராண்டா,  வணபிதா மைக்கல் டீ. மெலோ,  வணபிதா பிரான்சிஸ்கோ டீ. யேசு. வண.பிதா ஜோசவாஸ் இக்குருக்களை ஆரத்தழுவி மடுவில் நன்றித் திருப்பலி ஒப்புக்கொடுத்தார். (Chronicale) 1846 இல் இலங்கையின் வடபகுதி விக்காரியமாக (மறைமாவட்டம்) அமைக்கப்பட்டு,  அதி. வந்த. பெற்றக்கிளி ஆண்டகை விக்கார் அப்போஸ்தலிக்க நியமனம் பெற்றார். இவர் தமக்கு உதவியாக அமலோற்பவ மரியநாயகி சபையாரை அழைத்திருந்தார். இச்சபையைச் சேர்ந்த செமேரியா மேற்றாணியாரால் மடுத்திருப்பதிக்கு அதிக திருத்தங்கள் செய்யமுடியவி;ல்லை.

1868 இல் அக்காலத்து வடமாகாண மறைமாவட்டத்திற்கு அதி வந்த. பொஞ்சீன் ஆண்டகை நியமிக்கப்பட்டார். இவர் 1870 இல் ஒவ்வொரு வருடமும் ஆடித் திங்கள் இரண்டில் மடு வருடாந்த உற்சவம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார்,  அன்று தொடக்கம் இன்று வரை,  ஆடி 2ம் திகதி திருவிழா மடுத்திருப்பதியில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசியார்,  தனது சரித்திர ஏட்டில் மடு சேத்திரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.  1872 இல் மடுத்திருப்பதியை முதல் முறையாக தரிசித்த அதி. வந்த. பொஞ்ஜீன் ஆண்டகை களிமண்ணினால் கட்டப்பட்டிருந்த சிறியகோவிலை கண்ணுற்று,  வேதனையுற்று,  ஆலயம் ஒன்றை அமைப்பதற்கு கன்னிக்கல் ஒன்றை 1872 இல் ஆவணி திங்கள் 8 இல் நாட்டினார்.

 

அதி. வந்த. பொஞ்ஜீன் ஆண்டகையால்,  தொடங்கப்பட்ட மடு ஆலய கட்டுமான பணி அதி. வந்த. மெலிசன் ஆண்டகை,  காலத்தில் தொடரப்பட்டு பின்பு அதி. வந்த. யூலன் ஆண்டகையின் காலத்தில் முற்றுப்பெற்றது. இதனைத் தொடர்ந்து அழகான கோவில் முகப்பும்,  விசாலமான குருமனையும்,  நற்கருணை சிற்றாலயமும்,  லூர்த்துக்கெபியும்,  அடுத்தடுத்து கட்டப்பட்டன. அருகில் உள்ள குளத்தை ஆழப்படுத்தி பக்தர்கள் நீராடுவதற்கும்,  குடிப்பதற்கும்,  பல குடிநீர் கிணறுகளும் கட்டப்பட்டன.

1900 ஆம் ஆண்டுகளி;ல்,  அரச ஊழியர்கள் தங்குவதற்காகவும்,  தமது கடமைகளை செய்வதற்காகவும்,  ஓர் அரச விடுதியும்,  அருட்சகோதரிகளின் சேவைகளுக்காக ஓர் கன்னியர் மடமும்,  பக்தர்களின் நலன்கருதி நோயாளர்கள் தங்கும் வைத்தியசாலையும்,  வெளி உலகுடன் தொடர்புகொள்ள தபால் தொலைபேசி காரியாலயமும்,  திருவிழாக் காலங்களின்போது சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸ் காரியாலயமும்,  நீதிமன்றமும்,  மடுச்சுற்றாடலில் அமைக்கப்பட்டன.   பின்னர் அதி. வந்த. புறோ ஆண்டகை,  இப்பதியை மக்களின் யாத்திரை ஸ்தலமாக அங்கீகரிக்கச் செய்ததுடன் மடு அன்னையின் பழமை வாய்ந்த சுரூபத்திற்கு முடி சூட்டிவிக்க ஆரம்ப முயற்ச்சிகளை மேற்கொண்டார்.

இவரைத் தொடர்ந்து அதி. வந்த. கியோமார் ஆண்டகை,  தமது மறைமாவட்ட பணியை மடு அன்னையின் முடிசூட்டு விழாவுடன் ஆரம்பித்தார். இவர் மடுத்தேவாலயத்தின் முற்பகுதியை விசாலமாக்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் பிற்பகல் ஆராதனைகளில் முற்றவெளியில் இருந்து பங்குபற்றுவதற்கு வழி சமைத்ததுடன் இயேசுநாதரின் சிலுவையில் அறையப்பட்ட திருச்சுரூபம்,  பற்றிமா அன்னையின் திருக்சுரூபம் போன்றவற்றையும் மடுத்திருப்பதியில் நிறுவினார். ஜந்து ஆண்டுகள் அரிய சேவையின்பின் முதுமை காரணமாக யாழ் மறை மாவட்டத்தையும்,  மருதமடுத் திருத்தலத்தின் பாதுகாப்பையும்,  அதி. வந்த. எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையிடம் ஒப்படைத்தார். இவரின் காலத்தில் மடுமாதாவின் பக்தி இலங்கையின் பல்வேறு மறைமாவட்டத்திற்கும் விரைவாக பரவலாயிற்று.

1924ம் ஆண்டு ஆடித்திங்கள் பரிசுத்த பாப்பரசர் 11ம் பத்திநாதரின் பிரதிநிதியாக கொழும்புக்கு வருகைதந்த அதி. வந்த ஆண்டகை ஆஷா குடேற்,  அவர்கள் மாதாவின் சிரசிலும்,  கரங்களில் ஏந்தியிருந்த தேவபாலனின் சிரசிலும்,  வைரகற்கள் பதிந்த இருதங்க முடிகளையும் சூட்டினார். அவ்வேளையில் திருநாள் திருப்பலியை. முன்னாள் யாழ் ஆயர் கியோமார் ஆண்டகை,  நிறைவேற்றியதுடன்,  தூத்துக்குடி ஆயர் அதி. வந்த றோச் ஆண்டகை மக்களைக் கவரும் வகையில் மாதாவின் புதுமைகளைப் பற்றி பிரசங்கித்தார். இந்நிகழ்ச்சிக்கு 150 ஆயிரம் மக்களும்,  50ற்கும் மேற்பட்ட இலங்கை இந்திய குருக்களும்,  அக்காலத்தில் இருந்த யாழ்,  கொழும்பு,  கண்டி,  காலி,  மறைமாவட்ட ஆயர்களும்,  பக்திப் பரவசத்துடன் முடிசூட்டு விழாவில் பங்கு பற்றியதாக சரித்திரம் கூறுகின்றது. இலங்கையிலுள்ள பல தேவாலய மணிகள் ஆர்ப்பரிக்க,  பீரங்கிகள் முழங்க,  மருதமடு அன்னையின் கீதங்கள் வானொலியில் ஒலிக்க,  பல்லாயிரம் மக்களின் கனவு அன்று நனவாகியது.

1944ம் ஆண்டு ஆவணி 25ல் மருதமடு அன்னையின் தேவாலயத்தை அபிஷேகம் செய்ய மக்களும் ஆண்டகைகளும் சித்தம் கொண்டமையினால்,  2வது மகாயுத்த காலம் நிலவியபோதிலும் வெகுபக்தி விமரிசையாக 30 ஆயிரம் மக்கள் கலந்துகொள்ள ஆலயம் அபிஷேகம் பண்ணப்பட்டு புதிய மாபில்;கல் பீடத்தில் நன்றித் திருப்பலியை கியோமோர் ஆண்டகை ஒப்புக்கொடுத்தார், அமலோற்பவ மரியநாயகி சபைக்குருமார் இலங்கைக்கு வந்து தொண்டாற்றிய நூற்றாண்டு விழாவை கொண்டாடும் முகமாக அதி. வந்த. கியோமோர் ஆண்டகையின் தலைமையின்கீழ் மடு அன்னையின் திருச்சுரூபம் “கன்னிமரியாள் ஒர் பிரசங்கி” என்னும் கருப்பொருளில் யாழ்ப்பாண மேற்றாசனத்தில் உள்ள ஒவ்வொரு விசாரனைப் பங்கிற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதற்காக ஒவ்வொரு பங்கிலும் இருதினங்கள்,  செபதபங்கள் அனுசரித்தும்,  மக்கள் பயபக்தியுடன் தமது மீசாம்களை அலங்கரித்தும்,  மனம் திருப்புதலுக்கான முயற்சியாக இவ்வருகையை ஆயத்தம் செய்தனர்.

இம் மாதாவின் யாழ் பவனி பங்குனி 15ம் திகதி தொடக்கம் வைகாசி 5ம் திகதி வரை நடந்தேறியது. இந்த 50 நாட்களிலும் சுமார் 80 பங்குகளில் மாதாவின் தரிசனம் கிடைத்ததை கிறீஸ்தவர்களும்,  பிறசமயத்தவர்களும் பெரும்பேறாக கருதினர்.இக்காலப்பகுதியில் சுமார் 51 ஆயிரம் கத்தோலிக்க மக்கள் தங்களை தேவதாயாருக்கு காணிக்கையாக்குவதற்காக பத்திரங்களில் கையொப்பமிட்டு மடு அன்னையின் திருப்பாத கமலங்களில் வைத்ததாக சரித்திரம் சான்று பகருகின்றது.

1949 இல் மருதமடு தாயாரின் முடிசூட்டு விழா 25 வருடங்களை பூர்த்தி செய்தது. அவ்வாண்டில் யாழ் ஆயரான அதி. வந்த. கியோமோர் ஆண்டகை அபிஷேகம் செய்யப்பட்ட வெள்ளிவிழாவும் மடுவில் நிகழ்ந்தது,  இவ்வைபவத்தில் 150 ஆயிரம் மக்கள் கலந்துகொண்டதுடன்,  இரவு 10.00 மணி தொடக்கம் அதிகாலை 2.00 மணி வரை நடைபெற்ற வேண்டுதல் வழிபாட்டில்,  ஐம்பதாயிரம்; யாத்திரிகர்கள் கலந்துகொண்டு தமிழிலும்,  சிங்களத்திலும்,  இலத்தீன். மொழியிலும் வேண்டுதல் செய்தார். (Maruthamadhu)

1950 இல் மடுத்தேவாலயம் இரண்டு பெரிய மின்பிறப்பாக்கியின் மூலம்,  ஒரு சதுர கி.மீ க்கு மின்னொளிய10ட்டப்பட்டு ஜோதி மயமாக காட்சியளித்தது. 1964 இல் மன்னாரில் ஏற்பட்ட கடும்புயல் காரணமாக,  மடுத்தேவாலயமும்,  அதனைச் சுற்றியுள்ள அடர்ந்த காட்டு மரங்களும்,  பெரும் சேதத்திற்கு உள்ளாயின. ( 1964 மார்கழியில் ஏற்பட்ட பலத்த சூறாவழியினால்  பலத்த சேதங்கள்  திருப்பதியில்  ஏற்பட்ட போதும் மன்னார் – மதவாச்சி சந்தி > மடுறோட்டில் இருந்த சுருபம் சிறிதளவேனும் எதுவித பாதிப்பும் இன்றி இருந்தது.  சூறாவழி நடந்து 3 ம்நாள் என் கண்ணால் கண்ட காட்சி . அப்போது எனக்கு 11 வயது. Reported by Roseparitha Croos, Vankalai)  வண பிதா,  பிறோகான் 1950 இல் தனது அரிய முயற்ச்சியினால்,  வெளிநாட்டில் இருந்து மாபிளினால் தயாரிக்கப்பட்ட மருதமடு அன்னையின் திருச்சுரூபம் இரண்டைத் தரிவித்து,  பெரிய சுரூபத்தை மடுமாதா தேவாலயத்தின் முகப்பிலும் ( PORTICO) சிறிய சுரூபத்தை மடுறோட்,  . மன்னார் – மதவாச்சி,  சந்தியில் அமைந்துள்ள நுழைவாயிலிலும்,  ஸ்தாபித்ததார். (Chronicale)

மடுதேவாலயத்திற்கு காணிக்கையாக வழங்கப்படும்,  நிதிகள் யாழ் மேற்றாசனத்திற்கு உட்பட்ட கத்தோலிக்க பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவியதாக நம்முன்னோர்கள் (Cronicale – catholicial in Jffna y. f. Rer . Gnanapirahasiyar.)1974 இல் ஆடித்திங்கள் 2ம் திகதிக்கு முன்னர் மடுஅன்னையின் மகுட அபிஷேக பொன்விழாவை முன்னிட்டு,  மடு அன்னையின் திருச்சுரூபம் யாழ் மேற்றாசனத்தில் சகல விசாரனைப் பங்குகளுக்கும் திருப்பவனியாக எடுத்துச்செல்லப்பட்டது.

இப்பவனியின் அச்சாரமாக பரிசுத்த தந்தையால் 1975ம் ஆண்டு புனித ஆண்டாக தெரிந்தெடுக்கப்பட்டு “ஒப்புரவாக்குதலும்,  கிறீஸ்தவவாழ்வை புதுப்பித்தலும்” என்ற மையக்கருத்தில். ஒவ்வொரு பங்கிலும் ஆயத்த வழிபாடுகள் நடைபெற்று அறிவுரைகள்,  ஒப்புரவாதல்,  நற்கருணை வழிபாடு,  அன்னைக்கு கூட்டுவழிபாடு,  போன்றவற்றினால் மக்கள் மத்தியில் ஒர் உளமாற்றம் ஏற்பட்டது. பொன்விழா,  திருப்பலியின்போது கொழும்பு அதி. வந்த. மேற்றாணியாரும் இலங்கையின் 1வது கருதினாலுமாகிய அதி. வந்த. தோமஸ் கூறே ஆண்டகையினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களின்போது. கத்தோலிக்கர் அல்லாத பிறசமய யாத்திரிகர்களும்,  மடுமாதாவின்மேல் நம்பிக்கை வைத்து வேண்டுதல்களை மேற்கொள்வது தற்போதும் நடைபெற்று வருகின்றது. மேலும் “பாவிகளுக்கு அடைக்கலமும்” “கிறீஸ்த்தவர்களுக்கு தஞ்சமுமாய்” மடு அன்னை இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். அத்துடன் திருவிழாக்காலங்களில் காலை தொடக்கம் மாலை வரை பல குருமார் பாவசங்கீர்த்தனம் கேட்பதில் ஈடுபட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கும்.

திருவிழாக்காலங்களின் போது பக்தர்கள் தமது தேவைகளை உணர்த்தவும் நேர்த்தியை நிறைவேற்றவும் பல வெளிப்படையான அடையாளங்கள்,  செயல்களில் ஈடுபடுவதை காணக்கூடியதாகவுள்ளது. ஒருசில சிங்கள யாத்திரியர்கள் மடுத்திருத்தலத்தை தரிசிப்பதற்காக தங்களது வீடுகளில் மண்ணினால் பெரிய உண்டியலை செய்து அதில் ஒறுத்தல் மூலமாகவும்,  தமது வருவாயில் ஓர் பங்கினை சேகரித்தும்,  நிதி சேர்த்து அந்நிதியை அடுத்த யாத்திரைக்கு செலவாகப் பாவிப்பதும் உண்டு.

 

தேவாலயத்தின் இடது பக்கத்தில் மெழுகுதிரி,  செபமாலை,  வரவணிக்கம்,  மன்றாட்டுப் புத்தகங்கள்,  புகைஞ்சான். நேர்த்திக்கடன் வேண்டுதல் பொருட்களான. குழந்தை உருவம்,  தொட்டில்,  கை,  கால்,  போன்றனவும். ஓலைப்பெட்டிகளில் மடுமாதாவின் ஆயுள்வேத மூலிகைகள்,  போன்றவை பக்தர்களின் தேவைக்காக விற்பனை செய்யப்படுகின்றன. கோவிலின் உள்ளே உள்ள திருச்சிலுவைப்பாதை ஸ்தலங்களில் மக்கள் சிலுவைப்பாதை செய்வதிலும்,  கோவிலின் நடுவினில் முழங்காலால் நடப்பதையும். சுற்றுப்பிரகாரத்தின்போது. கடலைப்பொரி,  பூக்கள்,  போன்றவற்றை கீதங்கள்பாடி,  தூவுவதையும்,  சுரூபக்கூட்டுக்கு கீழ்பக்கத்தால் கடப்பதையும் நம்பிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

மடுத்தேவாலயத்தை சுற்றியுள்ள 50 ஏக்கருக்கு மேற்பட்ட அடர்ந்த மரங்களின் கீழ் மக்கள் கூடாரங்கள் அமைத்து,  தற்காலிக கொட்டகைகள் அமைத்து தங்குவதும்,  மூவேளை உணவை கூட்டாக சமைத்து சந்தோஷமாக உண்பதிலும். தமக்கு அருகிலுள்ள அறிந்திராத மக்களுடன்,  பகிர்ந்து மகிழ்வதையும் காணக்கூடியதாக இருக்கும். சகல மக்களுக்கும் சுத்தமான குடிநீரை குறிப்பிட்ட நேரத்தில் வழங்குவதிலும். உணவுச்சாலைகள் அமைத்து உணவுத்தேவையை பூர்த்தி செய்வதிலும்,  சுகாதாரத்தை காலையும்,  மாலையும் பேணுவதிலும்,  மடு பரிபாலன சபையும்,  மடுபிரதேச செயலாளரும்,  மடு உள்ளுராட்ச்சி திணைக்கள உத்தியோகத்தர்களும் ஈடுபட்டிருப்பதையும் காணலாம்.

இத்துடன் பல பாடசாலை சாரணர்களும்,  சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிவினரும்,  ஏனைய தொண்டர் அமைப்பினரும் பொதுமக்களை வழிப்படுத்துவதிலும்,  தற்காலிக மருத்துவமனை,  அரச நிர்வாகம்,  நீதிமன்று,  தபாற்காரியாலயம்,  போக்குவரத்துச் சேவை காரியாலயம்,  புகையிரத நிலைய காரியாலயம்,  போன்றனவும் திருவிழாக்காலங்களில் சிறப்பான சேவையை ஆற்றிவந்ததை காணக்கூடியதாக இருக்கும்.1990 முன் மடு வீதியில் அமைந்துள்ள மடுறோட்,  புகையிரத நிலையம்,  இலங்கையின் மிக நீண்டதொரு புகையிரத மேடை,  கொண்டதாக அமைந்திருந்ததை நாம் அறிவோம். ஒரு நாளில் நான்கிற்கு மேற்பட்ட விஷேட புகையிரதங்கள்,  அதிக பிரயாண பெட்டிகளை கொண்டதாக மடுவிற்கு வருகைதந்ததும்,  மடு வீதியில் அமைந்துள்ள தற்காலிக பேரூந்து ஸ்தானத்தில் இருந்து ரயில் இணைப்புச் சேவைகள் மடுக்கோவிலுக்கு நடைபெற்றதும் உண்டு.

திருத்தலத்தின் புனிதத்தை பேணுவதற்காக மதுபானம் பாவித்தல்,  புகைப்பிடித்தல்,  போதைப்பொருள் பாவித்தல்,  துர்நடத்தையில் ஈடுபடுதல்,  முற்றாக தடை  செய்யப்பட்டுள்ளது,  கேளிக்கைகள்,  களியாட்டங்கள்,  மடு நிர்வாகத்தினால் முற்றாக தடைசெய்யப்பட்டு மடுத்திருத்தலம் உணவு,  உடை,  உறையுள்,  பக்தி,  பரவசம் போன்றவற்றிற்கு மாத்திரம் உட்பட்டதாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அயல்கிராமங்களில் உள்ளவர்கள் நேர்த்திக்கடனுக்காக இரண்டு,  மூன்று,  நாட்கள் கால் நடையாக நடந்து கூட்டம் கூட்டமாக “ஆவே ஆவே மரியா” “வாழ்க வாழ்க மரியே” (மருதமடு மாதாவே) என்னும் கீதத்தைப்பாடிக்கொண்டு மடுத்திருப்பதியை வந்து அடைவதை தற்போதும் காணக்கூடியதாகவுள்ளது.

மடு கிராமசேவகர் பிரிவு சுமார் 28.93 சதுர கி.மீ இடப்பரப்பை கொண்டுள்ளது. இதில் மடுத்தேவாலயம்,  மடுபெரும் காடு,  கொக்குடையான்,  சின்னப்பண்டிவிரிச்சான்,  போன்ற இடங்கள் அடங்கும்,  8 சதுர கி, மீ இடப்பரப்பில் அமைந்துள்ள அடர்ந்த காட்டினி;ல் கொடிய விலங்குகளின் மத்தியில் மடுமாதா எழுந்தருளி இருப்பதினால். மடுமாதாவை கானகத்தின் கன்னி என அழைப்பர்,  2010 இல் மடுத்திருத்தலத்திற்கு மின்சார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதால்,  சுமார் 1சதுர கி.மீ பரப்பிற்கு புனிதப10மி மின் ஒளியினால் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.

திருவிழாக்காலங்களில் காலை 5.00 மணியானதும்,  திரிகால மணி அடித்து விடுதிகள்தோறும் கேட்கும்படி ஒலிபெருக்கி மூலம் திரிகாலச்செபம் சொல்லப்படும். மக்கள் பாவனைக்காக குழாய் குடிநீர் குறிப்பிட்ட நேரத்தில் விநியோகிக்கப்படும். காலை 5.30 தொடக்கம் 7.30 வரை அடுத்தடுத்து திருப்பலி பூசைகள் நடைபெறும். கோவில்களிலும் ஆறு சிற்றாலயங்களிலும் உள்ள பன்னிரண்டு பீடங்களில் நாற்;பது குருமார்கள் திருப்பலி ஒப்புக்கொடுப்பார்கள். பாவசங்கீர்த்தனம் காலை 8.00 தொடக்கம் 1.00 மணி வரையிலும் பிற்பகல் 3.00 தொடக்கம் 7.00 மணிவரை மும்மொழிகளில் கேட்கப்படும்.

 

1993ல் மடுகோவிலின் பரிபாலகராக இருந்த வண. பிதா பி.ஜேசுராஜா அடிகள் 14 சிலுவைப்பாதை ஸ்தலங்களின் படங்களை மடுக்கோவிலின் வளாகத்தில் அமைத்து பக்தர்களின் ஆன்மீக தாகத்தை தீர்த்து வைத்தார்,  2005ம் ஆண்டில் வண. பிதா பிலிப் அடிகளாரினால் மடுத்திருத்தலத்தின்; மேற்கு எல்லையின் சின்னப்பண்டிவிரிச்சான் சந்திக்கு அருகாமையில் சிறிய நுழைவாயில் ஒன்று அழகுற  அமைக்கப்பட்டது.

சமாதானத்தை வேண்டி அணையா தீபம் ஒன்று மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களினால் மடுமாதாவின் உள் பீடத்தில் 2003ம் ஆண்டு ஏற்றி வைக்கப்பட்டது. 1999ம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவம் மடுக்கோவில் பகுதியை கைப்பற்றும் முகமாக  போராளிகளுடன் செல்தாக்குதலில் ஈடுபட்டபோது,  மடு அன்னையின் சிற்றாலயத்தில் தஞ்சமடைந்திருந்த பொது மக்கள் 43 பேர் பலியாகிய துர்ப்பாக்கிய சம்பவம் நடைபெற்றது. இதன்பின் ஆயர் அவர்களினால் கோவில் மந்திரிக்கப்பட்டு மீண்டும் அபிஷேகம் செய்யப்பட்டது.

போரின் உச்ச கட்டத்தில் 2008 ஆரம்பப்பகுதியில்,  போராட்டத்திற்காக இளைஞர்களை சேகரிக்க தொடங்கிய காலப்பகுதியில் வயது வந்த ஆண்,  பெண்,  இளைஞர்,  யுவதிகளை வைத்திருக்கும் தாய்மார்கள்,  மரியன்னையை நம்பி தமது பிள்ளைகளை அக்காலத்தில் மடு பரிபாலகராக இருந்த வண. பிதா எமிலியானுஸ்பிள்ளையிடம் கையளித்திருந்தனர். இப்படியாக ஆயிரக்கணக்கான இளைஞர்,  யுவதிகளை இரவு,  பகலாக பாதுகாத்த பெருமை மடுமாதாவிற்கே உண்டு.

2010ம் ஆண்டில் சிலுவைப்பாதை ஸ்தலங்களின் சிலைகள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தன அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இவை மன்னார் ஆயரினால் ஸ்தாபிக்கப்பட்டன.இலங்கையின் 2வது கருதினாலான அதி. உயர் கலாநிதி மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் 15-08-2011 காலப்பகுதியில் மடுத்திருப்பதியை தரிசித்து தனது முதல் திருப்பலியை நிறைவேற்றினார்.

விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாகவும் மடுத்திருப்பதியை அரசியல் மயப்படுத்தலின்கீழ் உல்லாசப் பயணிகளை கவரும் உல்லாச புரியாக,  சந்தைப்படுத்தல் இடமாக மிளிர்வதை இலங்கை கத்தோலி;கத் திருச்சபை என்றுமே விரும்பவில்லை.மடுகுளம் ஆழமாக்கப்பட்டு கூடிய மழைநீரை சேகரித்து வைப்பதில் கவனம் செலுத்தப்பட்டள்ளது,  மடு ஆலயத்தைச் சுற்றி பன்னிரண்டிற்கும் மேற்பட்ட கிணறுகள்,  குளத்தின் வரம்பிற்குள்ளும் ஏனைய இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன,  1983 இல இலங்கை அரசினால் (By Hon President Premadasa) ஆயிரம் மலசல கூடங்கள் பக்தர்களின் நலன்கருதி கட்டிக்கொடுக்கப்பட்டன.

பக்தர்களின் நலன்கருதி நூற்றுக்குமேற்பட்ட நிரந்தர,  தற்காலிக,  விடுதிகள் ஆலயத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. போரின்பின் மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு மீள்குடியேறியமையினால் சின்னப்பண்டிவிரிச்சான்,  பெரியபண்டிவிரிச்சான்,  தட்சணாமருதமடு,  மடுறோட்,  போன்ற மடுவை அண்டிய கிராமங்களில் தேவாலயங்கள் புனரமைக்கப்பட்டு,  மக்கள் வழிபாட்டிற்கென திறந்து வைக்கப்பட்டுள்ளன,

2007ம் ஆண்டுக் காலப்பகுதியில் மன்னார் மக்கள் மடுத்தேவாலயத்திற்கு மடுவீதியினால் செல்வதற்கு முதலில் அனுமதிக்கப்பட்டு,  பின் தடைசெய்யப்பட்டது,  பயணிகளின் வசதிக்காக மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கம் மடுவீதியில் பிரயாணிகள் தங்கும் மண்டபம் ஒன்றை அமைத்துக்கொடுத்தது. மடுவீதியின் நுழைவாயிலின் அருகாமையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மடு அன்னையின் திருச்சுரூபம் (marble statue) அவ்வீதியால் போகும் பாதசாரிகளுக்கும்,  பக்தர்களுக்கும்,  ஓரு கலங்கரை விளக்காக திகழ்கின்றது.

2009ம் ஆண்டுகளில் மடுவீதியின் நுழைவாயில் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த மடுத்தேவாலயத்தின் வரைபடத்தை ஒத்த நுளைவாயில் ஒன்று பெரும் பணச்செலவில் ஸ்தாபிக்கப்பட்டு மன்னார் ஆயரினால் 2011 இல் திறந்துவைக்கப்பட்டது, 2010ம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கம் மடுவின் சுற்றாடலின் சில பகுதியை சரணாலயம் என வர்த்தமானி மூலம் பிரகடணப்படுத்தி இருப்பதனால் மடுபரிபாலனம் மடுக்கோயிலின் எல்லையை மீள் பரிசீலனை செய்யவேண்டியள்ளது

 

போரின்பின் அரசாங்கத்தினால் ஆயரின் அனுசரனையுடன் 2009-2011 ஆம் காலப்பகுதியில்,  மடுத்தேவாலயம் புனரமைக்கப்பட்டதுடன்,  மடுக்கோவிலைச் சுற்றியுள்ள (பிரதான) வீதிகள் பிரதான செப்பனிடப்பட்டு,  சீமேந்துக் கற்களினால் நடைபாதை போடப்பட்டு மின்னொளி ஊட்டப்பட்டு,  புதுப்பொலிவுடன் காணப்படுகின்றன,  2010-2011 ஆம் காலப்பகுதியில்,  தெற்கிலுள்ள பெருந்திரளான யாத்திரியர்கள் குழுக்களாகவும்,  தனித்தும்,  நாளாந்தம் மடுத்தேவாலயத்தை தமது ஆன்மீக தேவைக்காக தரிசிக்கின்றனர்,  ஒருநாளில் சுமார் ஜந்து வாகனங்களும்,  200 ற்கு மேற்பட்ட பக்தர்களும்,  மடுவை தரிசிப்பதாக நாள் ஏடுகள் குறிப்பிடுகின்றன,

2011 ஆம் ஆண்டு இறுதியில் 21 வருடங்களின் பின்,  மடு புகையிரத நிலைய மீள்கட்டுமான பணிகள்,  அரசாங்கத்தினால் இந்திய உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன,  2011 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் 1990 இல் இடம்பெயர்ந்து சென்ற சிங்கள,  முஸ்லீம்,  தமிழ் மக்கள்,  மீண்டும் மடுவை அண்டியள்ள பிரதேசங்களில் வந்து குடியேறத் தொடங்கினர்,  இருப்பினும் மடுத்தேவாலயத்தின் தனித்துவமான இயற்கை வன,  சுற்றாடல்,  கடந்த 500,  வருடங்களுக்கு மேலாக மாறுபடாமல் அமைதியும்,  பக்தியும்,  சூழ்ந்த இடமாக இன்றும் இருப்பது குறிப்பிடத்தக்கது,

2011 ஆவணி மாத திருவிழாவிற்கு முன்,  மன்னார் மேதகு ஆயர் ஜோசப் ஆண்டகை அவர்கள்,  2008 இல் ஆரம்பிக்கப்பட்ட அழகிய இரண்டு மாடிக் கட்டிடத்தை,  குருக்கள் தங்குவதற்காக திறந்து வைத்தார்,  பல ஆண்டுகளின் பின் இக்கட்டிடம் ஒன்றே,  மடுத்திருப்பதியில் ஸ்தாபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, 1544ம் ஆண்டுக்கு முன்னரே பிரான்சிஸ்கன் சபைக் குருக்களினால் மாந்தையில் வைக்கப்பட்ட மாதா சுரூபம் 500 ஆண்டுகளுக்கு மேலாக அன்றும் மடுவில் மடுமாதா என பக்தர்களால் அன்பாக அழைக்கப்பட்டு அருள்மழை பொழிந்து கொண்டிருக்கின்றார்.

பிரான்சிஸ் சபைக்குருக்கள் 1542ம் ஆண்டு மாதோட்டத்தில் பல சிலுவை வழிபாட்டுக்காரரை மனமாற்றி கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்த்துள்ளனர். 1544ல் மன்னார் தீவில் வேதசாட்ச்சிகளாய் மரித்தவர்களைத் தவிர ஏனையோர் மாதோட்டத்திற்கு வந்து பிரான்சிஸ்கன் சபையினரின் கண்காணிப்பில் வாழ்ந்தனர். அருட்தந்தை மசேயிற் அ.ம.தி. அடிகளார் 1886ல் மடுவிலுள்ள “கோடேக்ஸ்” என்ற குறிப்பேட்டில் மருதமடு மாதாவின் ஆரம்ப இருப்பிடம் மாந்தை என பரம்பரையாக பேசப்பட்டுவருகிறது. என குறிப்பிட்டுள்ளார்.

பேதுரு டி. பென்ரக்சன் எனும் குருவானவரால் 1614ம் ஆண்டு மாந்தையிலேயே ஆரோக்கிய அன்னைக்கென்று ஓர் ஆலயம். கட்டப்பட்டது என வெளிப்படுத்தியுள்ளார். இப்பின்னணியில் மாந்தை திருமுழுக்குத் தொட்டியையும்,  மாந்தை ஆலய பீடத்தின் முன்னிருந்த நற்கருணை கிராதியையும்,  மடு அன்னையின் திருச்சுரூபத்தையும்,  பற்றிய தொன்மையை அறிந்து கொள்ளலாம்.

மாந்தை திருமுழுக்குத் தொட்டி மாந்தை துறைமுகத்திற்கு அருகாமையில் கண்டெடுக்கப்பட்ட தொன்மை வாய்ந்த திருமுழுக்குத் தொட்டி. தற்போது வவுனியா அருங்காட்ச்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இத்தொட்டி கேரளாவிலுள்ள சிரியான் மரபு மீறாத திருச்சபைக் கோவிலில் காணப்படும். திருமுழுக்குத் தொட்டியை ஒத்ததான அமைப்பைக்கொண்டது. இத்தொட்டியின் வெளிச் சுற்றளவு 330 உஅஇ ஆழம் 132 உஅஇ அதன் தடிப்பு அண்ணளவாக 12.7உஅ எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மாந்தை ஆரோக்கிய அன்னை ஆலயம் 1670ல் ஒல்லாந்தர் கைவசமானது. அவர்கள் இவ்வாலயத்தை தமக்குரிய கூட்டங்களை நடாத்தும் மண்டபமாக  பாவித்துள்ளனர். 1834ல் காசிச்செட்டி என்பவர் மாந்தையில் இடிபட்ட ஆலயப்பகுதிகள் இருந்ததாக தனது “சிலோன் கசற்றி” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.இவ்விடத்திலே பீடத்திற்கு முன்பகுதியில் இருக்கும் நற்கருணைக் கிராதியையும்,  ஒரு சிறிய மாதா சுரூபத்தையும்,  பி.டபிள்யூ. டி கண்காணிப்பாளர்கள் கண்டு. அதை பக்தியோடு பேணிப்  பாதுகாத்து வந்தனர். (அன்ரனைஸ் : 1956-1979 – 7)

தற்போது அந்த நற்கருணை கிராதியோடு இணைந்ததாக லூர்த்து கெபி ஒன்றை 1949ல் அருட்தந்தை ஜெ. சிங்கராயர் அடிகளார் அப்போதைய ஆயர் கியோமர் ஆண்டகையின் வழிநடத்தலில் கட்டியெழுப்பியுள்ளார்,  இக்கெபியானது 30 வருட போராட்ட காலங்களில் காப்பாற்றப்பட்டு இன்றுவரை நம் முன்னோரின் விசுவாசத்தை வெளிக்காட்டும் தொன்மைச் சின்னமாக காட்ச்சியளிக்கிறது.

 

மாந்தையில் இருந்த மாதா சுரூபத்தை சில பிரான்சிஸ்கன் சபைக் குருக்களும்,  மாந்தை மக்களும்,  முதல் தடவையாக இடம் பெயர்ந்து மடுவிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். எனும் பல்டேயுஸ் பாதியாரின் குறிப்பை ஆதாரங்காட்டி 1894ல் ஜே.பி லிவின்ஸ் என்பவர் தனது “மனுவல் ஒல் வன்னி” எனும் நூலில் 254ம் பக்கத்தில் கூறியுள்ளார். இக்கருத்தையும் “மாந்தை மாதாவே மடுமாதா” எனும் மாதோட்ட மக்களின் ஏகோபித்த தொனிக்குரலையும் ஆதாரமாகக் கொண்டு மன்னார்த் தீவு கிறிஸ்த்தவர்கள் மரிப்பதற்கு முன்னரே மடு அன்னை சுரூபம் மாந்தை ஆலயத்தில் இருந்துள்ளது.

வருடந்தோறும் நடைபெறும் மடு அன்னையின் திருநாட்கள்.

1. தை 1ம் நாள்     – இறைவனின் அன்னை தூய கன்னி மரியா திருவிழா     Mother of God

2. மாசி 2ம் நாள்    – காணிக்கை மாதா திருவிழா

3. பங்குனி 10ம் நாள்  – தென்பகுதி சிங்களவர்களினால்;; பாராம்பரியமாக கொண்டாடப்படும் திருவிழா

(Feast that is being celebrated Traditionally by the Sinhalease brothern from South part of Srilanka )

4. பெரிய வியாழன் தொடக்கம் உயிர்த்த ஞாயிறு வரை       – பரிசுத்த ஞானொடுக்கம்

5. வைகாசி 1ம் நாள்   – ஞாயிறு மாதாவின் மாதம் Month of Mary

6. ஆடி 2ம் நாள்         – மரியாயின் மாசற்ற இதயம் – திருவிழா

7. ஆவணி 15ம் நாள       – தூய கன்னி மரியாயின் விண்ணேற்புத் திருவிழா

8. புரட்டாதி 8ம் நாள்    – தூய கன்னி மரியாயின் பிறப்பு திருவிழா   Birth of Mother Mary

9. ஐப்பசி 1ம் சனி         – மடுத் திருப்பதியின்; திருவிழா Madhu Church Feast

10. மார்கழி 8ம் நாள்        – தூய கன்னி மரியாயின் அமலோற்பவ திருவிழா   Holy Conception of Mary Mother

1670-2011 வரையான மருதமடு அன்னையின் தேவாலயத்தை பரிபாலித்த ஆயர்கள்,  குருக்கள்,  பொதுநிலையினர்

ஆண்டு    ஆயர்கள் – குருக்கள் –  பொதுநிலையினர்

1. 1670-1697   மடு ஒரேடேரியன் சபை வ.பிதா யோசவாஸ் (Oratorians))

2. 1697-1720   வண.பிதா பெற்றோ பெரேரா (Pedro Perrao)

3. 1720-1727   வண. பிதா. அந்தோனியோ டீ டவாரோ (Antonio de Tavora)