புனித அன்னை தெரேசா நினைவில் வறியோர் நாள்

உலக வறியோர் நாளில், புனித அன்னை தெரேசாவின் சொற்கள் நினைவுகூரப்பட வேண்டும் என்று, மும்பை உயர்மறைமாவட்ட துணை ஆயர் ஆல்வின் டி சூசா அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
நவம்பர் 18, வருகிற ஞாயிறன்று அகிலத் திருஅவையில் கடைப்பிடிக்கப்படும் இரண்டாவது உலக வறியோர் நாள் பற்றி ஆசியச் செய்தியிடம் கருத்து தெரிவித்த, ஆயர் ஆல்வின் டி சூசா அவர்கள், ஓர் ஏழை மனிதர், பசியால் இறப்பதன் காரணத்தை விளக்கியுள்ளார்.
ஓர் ஏழை இறக்கும்போது, கடவுள் அவரைப் பராமரிக்கவில்லையெனச் சொல்ல முடியாது, மாறாக, அந்த ஏழையின் தேவையை மற்றவர் நிறைவேற்றாமல் விட்டதே காரணம் என்று கூறினார், ஆயர் ஆல்வின் டி சூசா.
வருகிற ஞாயிறன்று, மும்பையில், Thane பகுதியில், வீடற்ற மக்களுக்கு விரிப்புகளும் உணவும் வழங்கத் திட்டமிட்டுள்ளார், மும்பை துணை ஆயர் ஆல்வின் டி சூசா அவர்கள்.

Comments are closed.