இதய அமைதி வழியாக உலகில் அமைதி

அன்பு மற்றும் உரையாடலின் மொழி, மோதலின் மொழியை வெற்றி கண்டு நிற்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து, இந்த நவம்பர் மாத செபக்கருத்தை ஒரு காணொளிச் செய்தியாக வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அனைவருக்கும் அமைதி தேவைப்படுகிறது, குறிப்பாக, இந்த அமைதியின்மையால் துன்புறும் மக்களுக்கு அதிகம் அதிகமாக அமைதித் தேவைப்படுகிறது என தன் காணொளிச் செய்தியை துவக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘அழகழகான வார்த்தைகளால் நாம் பேசலாம், ஆனால் நம் இதயத்திற்குள் அமைதி இல்லையெனில், இவ்வுலகிலும் நாம் அமைதியை காணமுடியாது’  என மேலும் அதில் கூறியுள்ளார்.

வன்முறைகள் அற்ற நிலையுடனும், 100 விழுக்காடு மென்மைப் போக்குடனும், அனைவரையும் உள்ளடக்கிய நற்செய்தி அமைதியை கட்டியெழுப்புவோம், எனக் கூறும் திருத்தந்தை, மோதலின் மொழியைத் தாண்டி, அன்பு மற்றும்  உரையாடலின் மொழி ஓங்கி ஒலிக்க வேண்டும் என அனைவரும் செபிப்போம் எனவும் நவம்பர் மாத செபக்கருத்தில் விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார்

Comments are closed.