நவம்பர் 9 : நற்செய்தி வாசகம்

தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-22

அக்காலத்தில் யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்; கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார். அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு, மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், “இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்” என்று கூறினார்.

அப்போது அவருடைய சீடர்கள், “உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்து விடும்” என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவுகூர்ந்தார்கள். யூதர்கள் அவரைப் பார்த்து, “இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள்.

இயேசு மறுமொழியாக அவர்களிடம், “இக்கோவிலை இடித்து விடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்” என்றார்.

அப்போது யூதர்கள், “இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பிவிடுவீரோ?” என்று கேட்டார்கள்.

ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார். அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட போது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து, மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரைச் சிந்தனை :

பொறுப்பும் முன்மதியுமுள்ள பணியாளர்களாக வாழ்வோம்!!

ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளயாடும். ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. அப்போது தோட்டக்காரனுக்கு ஒரு யோசனை தோன்றியது. தான் ஊருக்குப் போகும் நேரத்தில் குரங்குகளை தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றச் சொல்லலாமே என்று நினைத்தான்.

குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான். குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்சனை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை. “அது ஒண்ணும் பெரிய பிரச்சனை இல்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க” என்று யோசனை சொன்னான்.

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தைப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. “’என்னாச்சு?” என்றான் தோட்டக்காரன். “வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறதுக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்” என்றன குரங்குகள். தோட்டக்காரனோ புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, எவ்வளவு புத்தியில்லாத செயல் என்று தன்னையே நொந்துகொண்டான்.

நாம் ஒவ்வொருவரும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் மிகவும் பொறுப்புள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கவேண்டும். அப்படி நாம் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் பொறுப்பில்லாமலும் நம்பிக்கைக்குரியவராகவும் இல்லாமல் இருந்தால், நாம் நம்முடைய பொறுப்பிலிருந்து தூக்கி எறியப்படுவோம் என்பது உண்மை.

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு, ஒரு தலைவரிடத்தில் பணிபுரியும் பொறுப்பாளரைக் குறித்து பேசுகின்றார். பொறுப்பாளரோ அவரிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இல்லை என்பது தலைவருக்குத் தெரியவர அவர் அவரிடத்தில் கணக்குக் கேட்கின்றார். இதற்கிடையில் அந்த பொறுப்பற்ற பொறுப்பாளரோ, தலைவர் எப்படியும் தன்னை பொறுப்பிலிருந்து விலக்கிவிடுவார், அதனால் எதிர்காலத்திற்கு என்ன செய்வது என்று யோசிக்கின்றார். அப்போதுதான் அவருக்கு தன்னுடைய தலைவரிடத்தில் கடன்பட்டவர்களிடம் கொஞ்சம் சலுகை காட்டினால் அவர்கள் அவரை பின்னாளில் பார்த்துக்கொள்வார்கள் என்ற யோசனை பிறக்கின்றது. அவர் தனக்குத் தோன்றிய இந்த யோசனையின் படியே செய்கின்றார். இதனால் முன்மதியோடு செயல்பட்ட அந்த வீட்டுப் பொறுப்பாளரை தலைவர் பாராட்டுகின்றார்.

இயேசு கிறிஸ்து மேலே சொன்னதைச் சொல்லிவிட்டு, “ஒளியின் மக்களை விட, இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்கிறார்கள் என்பார். இயேசு இந்த உவமையின் வழியாக நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பானது கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பொறுப்பினை நேர்மையோடும் உண்மையோடும் செய்யவேண்டும். ஆனால், இயேசு சொல்கின்ற உவமையில் வருகின்ற வீட்டுப் பொறுப்பாளரோ தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பில் நேர்மையில்லாதவராக இருக்கின்றார். ஆனாலும் தலைவர் அவரைப் பாராட்டுகின்றார். அதற்கு அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் அவர் முன்மதியோடு செயல்பட்டது. தன்னுடயை தவறு தெரிந்துவிட்டதால், தலைவர் தன்னை எப்படியும் வேலையிலிருந்து நீக்கிவிடுவார், அதனால் எதிர்காலத்திற்கு என்ன செய்வது என்று அவர் மிக முன்மதியோடு செயல்படுகின்றார், அதனால் தலைவருடைய பாராட்டைப் பெறுகின்றார்.

இங்கே நாம் கற்றுக்கொள்ளவேண்டியது வீட்டுப் பொறுப்பாளரிடம் இருந்த பொறுப்பற்ற தன்மையை அல்ல, மாறாக அவரிடமிருந்த முன்மதியை. இந்த முன்மதியோடு நாம் செயல்பட்டோம் எனில், நம்முடைய வாழ்வில் வரும் எத்தகைய இடர்பாடுகளையும் எளிதாய் வெற்றிகொள்ளலாம். வீட்டுப் பொறுப்பாளர் தன்னுடைய கடந்த காலம் இப்படி ஆகிவிட்டதே ஒன்று வருந்திக்கொண்டிருக்கவில்லை, மாறாக எதிர்காலத்திற்கு என்ன செய்யவேண்டும் என்பதை தீர்க்காக யோசித்து, அதனை முன்மதியோடு செயல்படுத்துகின்றார்.

தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது திருமுகம் 5:10 ல் கூறுவார், “நாம் அனைவரும் கிறிஸ்துவின் நடுவர் இருக்கைக்கு முன்பாக நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறு பெற்றுக்கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும்” என்று. ஆம், ஒருநாள் நாம் ஆண்டவருக்குக் கணக்குக் கொடுக்கவேண்டும். அப்படிக் கணக்குக் கொடுக்கும்போது, நம்முடைய பொறுப்புகளில் நேர்மையாய், உண்மை உள்ளவரை இருந்திருக்கின்றோமா? என்று அவர் எதிர்பார்ப்பார்.

ஆகவே, நாம் நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் நேர்மையாய், உண்மையுள்ளவர்களாய், முன்மதியுடன் இருப்போம். அதன்வழியாக இறை

Comments are closed.