CHARIS – கத்தோலிக்க அருங்கொடை இயக்கத்தின் புதிய பணிக்குழு
கத்தோலிக்க அருங்கொடை இயக்கத்தின் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யும் வண்ணம் ஒரு புதிய, பன்னாட்டு பணிக்குழு, இவ்வாண்டு டிசம்பர் 8ம் தேதி உருவாக்கப்படும் என்று, திருப்பீடம் அறிவித்துள்ளது.
இத்தகைய ஒரு பணிக்குழு உருவாக்கப்படுவதன் அவசியத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பலமுறை கூறியுள்ளதையடுத்து, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவையின் கண்காணிப்பின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
CHARIS என்ற பெயருடன் நிறுவப்படும் இந்தப் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக, பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த Jean-Luc Moens என்ற பொதுநிலையினர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும், இப்பணிக்குழுவில் உலகின் ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 18 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.
வத்திக்கான் பாப்பிறை இல்லத்தின் ஆன்மீக வழிகாட்டியாகப் பணியாற்றும், அருள்பணி Raniero Cantalamessa அவர்கள், CHARIS பணிக்குழுவுக்கு, வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
CHARIS பணிக்குழு, 2019ம் ஆண்டு, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவன்று தன் செயல்பாடுகளைத் துவக்கும் என்று, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவை அறிவித்துள்ளது
Comments are closed.