நவம்பர் 2 : நற்செய்தி வாசகம்
வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்.ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வௌ;வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வௌ;வேறாகப் பிரித்து நிறுத்துவார்.
பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ; என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்: உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.
ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்: தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்: அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்: நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்: நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்: சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள் ; என்பார்.
அதற்கு நேர்மையாளர்கள் ;ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்? ; என்று கேட்பார்கள்.
அதற்கு அரசர், ;மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் ; எனப் பதிலளிப்பார்.
பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ;சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.
ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை: தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை ; என்பார்.
அதற்கு அவர்கள், ;ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்? ; எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், ;மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ; எனப் பதிலளிப்பார்.
இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மறையுரைச் சிந்தனை :
“ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது, மனிதர் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை”
தமிழகத்தில் தோன்றிய பிரபல நாடகாசிரியர் பம்மல் சம்பந்தம். அவர் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராகக் காதலித்தார். அவரையே மணமுடிக்கவேண்டும் என்றும் முடிவுசெய்தார்.
இதற்கிடையில் அவருக்குத் தெரிந்த சோதிடர் ஒருவர் அவரிடம், “உமக்கும் அந்தப் பெண்ணுக்கும் சாதகப் பொருத்தம் சரியில்லை. அதனால் நீர் அந்தப் பெண்ணை மணமுடிக்கவேண்டாம். அப்படி நீர் மணமுடித்தால் நீண்ட நாட்கள் நீர் உயிர்வாழமாட்டீர்” என்று எச்சரித்துவிட்டுப் போனார். சம்பந்தத்தின் வீட்டார்கூட சோதிடர் சொல்வதுதான் சரி, அவர் சொல்வதுபோன்று நீ அந்தப் பெண்ணை மணமுடிக்காமல், வேறொரு பெண்ணை மணமுடி என்றார்கள்.
சம்பந்தத்திற்கு அவர்கள் சொல்வதில் உடன்பாடு இல்லை. அதனால் அவர் ‘சாத்திரமாவது, மண்ணாங்கட்டியாவது’ என்று சொல்லி, தான் உயிருக்கு உயிராகக் காதலித்த பெண்ணையே மணமுடித்தார். அது மட்டுமல்லாமல், திருமண வாழ்வில் அறுபது ஆண்டுகளுக்கும் மேல் நிலைத்திருந்தார். அவருக்கு என்பதாவது வயது நடக்கும்போது அவர் இவ்வாறு கூறினார், “எனது திருமணத்தின்போது ஒரு தாலி, அறுபதில் ஒரு தாலி, எண்பதில் ஒரு தாலி என்று மூன்று முறை என் மனைவிக்குத் தாலி கட்டிவிட்டேன். ஆனாலும்கூட நான் இன்பமாகத்தான் திருமண வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்… சோதிடர் சொன்னது போன்று நான் என் காதலியை மணமுடிக்காமல், வேறொரு பெண்ணை மனமுடித்திருந்தால்கூட இவ்வாறு மகிழ்ச்சியாக இருந்திருக்கமாட்டேன்”.
சோதிடம், சாத்திர சம்பிரதாயம் என்று முடங்கிப்போகாமல், அவற்றையெல்லாம் தன்னுடைய வாழ்வால் பொய்யாக்கிய பம்மல் சம்பந்தம் நமக்குச் சொல்லக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான். அதுதான் ‘சாத்திர சம்பிரதாயங்களைவிட மனிதர்கள் உயர்ந்தவர்கள்’ என்பது.
அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்ட இந்த காலக்கட்டத்தில்கூட பலர் சாத்திர சம்பிரதாயங்களை. ஒருசில பழக்க வழக்கங்களை, அறிவுக்கு ஒவ்வாத சட்டதிட்டங்களை பற்றிப்பிடித்துக் கொண்டு வாழ்வது மிகவும் வியப்பாக இருக்கின்றது,. இத்தகைய பின்னணியில் சட்ட திட்டங்களை விடவும் சாத்திர சம்பிரதாயங்களை விடவும் மனிதர்கள் மேலானவர்கள் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இன்றைய நற்செய்தி வாசகத்தைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானது.
நற்செய்தி வாசகத்தில், ஓய்வுநாள் அன்று ஆண்டவர் இயேசு பரிசேயர் தலைவருடைய வீட்டிற்கு உணவருந்தச் செல்கின்றார். அவர் உணவருந்தச் சென்ற இடத்தில் நீர்கோவையுள்ள ஒருவர் இருக்கின்றார். ஓய்வுநாளான அன்று இயேசு அந்த மனிதரைக் குணப்படுவாரா? என்று அவரையே கூர்ந்து நோக்குகிறார்கள் பரிசேயர்கள். இயேசுவை விருந்துக்கு அழைத்திருக்கின்றோமே, அவரை நல்லவிதமாய் உபசரிக்கவேண்டுமே என்றெல்லாம் பரிசேயர் நினைத்துப் பார்க்கவில்லை. மாறாக அவரிடத்தில் எப்படியாவது குற்றம் காணவேண்டும் என்ற நினைப்போடு செயல்படுகின்ற பரிசேயரை என்னவென்று சொல்வது?.
தன் மீது குற்றம் காண பரிசேயக் கூட்டடம் துடியாய் துடித்துக் கொண்டிருப்பதை உள்ளுணர்வால் அறிகின்ற இயேசு அவர்களைப் பார்த்து, “ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா? இல்லையா? என்று கேட்கின்றார். அவர்களோ அமைதியாக இருப்பதைக் கண்ட இயேசு, நீர்கோவை நோயாளியின் கையை நீட்டச் சொல்லி, அவரைக் குணப்படுத்துகின்றார்.
இயேசு செய்த இந்த அற்புதச் செயல் நமக்கு ஒருசில செய்தியை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. முதலாவது, நல்லது செய்வதற்கு நல்லநேரமோ காலமோ காலமோ தேவையில்லை என்பதாகும். படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் தான் படைத்த அனைத்தும் நல்லதெனக் கண்டார் எனில், அவருடைய படைப்பில் தீயது என்று ஏதாவது இருக்குமா? நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படியிருக்கும்போது ஓய்வுநாளில் இயேசு நீர்கோவை உள்ள நோயாளியைக் குணப்படுத்தியத்தை எந்தவிதத்தில் தப்பு சொல்ல முடியும்?. ஆகவே, நாம் நன்மை செய்வதற்கு நேரம் காலம் பார்த்துக்கொண்டிருக்காமல், எல்லாக் காலத்திலும் நன்மை செய்யக்கூடியவர்கள் ஆகவேண்டும்.
இரண்டாவது, எல்லாச் சூழ்நிலையும் ஒரே நியதியைக் கடைபிடிக்கவேண்டும் ஒழிய, நமக்கொரு நியதியையும் அடுத்தவருக்கு ஒரு நியதியையும் கடைபிடிக்கக் கூடாது. பரிசேயக் கூட்டம் ஓய்வுநாளில் தங்களுடைய பிள்ளையோ ஆடுமாடோ கிணற்றில் விழுந்தால் அதனை தூக்கிவிட முற்பட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் இயேசு ஓய்வுநாளில், நீர்கோவை உள்ள நோயாளியைக் குணப்படுத்தியதும் அதைப் பெரிய தவறு போன்று பார்க்கின்றார்கள். இப்படி ஒருதலைச் சார்பாகச் செயல்பட்ட பரிசேயர்களைத்தான் இயேசு கடுமையாகச் சாடுகின்றார்.
ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம், பிறரிடம் இருக்கின்ற நிறைகளை மட்டுமே பார்ப்போம். நன்மை செய்வதில் கருத்தாய் இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Comments are closed.