அடைக்கலநாயகி ஆலயத்தில் சிறப்புற நடைபெற்ற கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா

சாண்டோ-இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துகள்

 

கிறிஸ்து உயிர்த்தார் அல்லேலூயா

கடவுள் இந்த உலகத்தில் இருக்கின்றார் என்பதை நம்முடைய வாழ்வால் நிரூபிக்கவேண்டும் என்பதைப் போன்று, ஆண்டவர் இயேசு உண்மையாகவே உயிர்த்தெழுந்து விட்டார் என்பதை நம்முடைய சாட்சிய வாழ்வால் நிரூபிக்கவேண்டும்.
இயேசு இந்த உலகிற்கு அன்பையும், உண்மையான அமைதியையும், மன்னிப்பையும் கொண்டு வந்தார். நாம் அவருடைய விழுமியங்களின் படி நடக்கும்போது இயேசு உண்மையாகவே உயிர்த்துவிட்டார் என உறுதிபடச் சொல்லலாம். மட்டுமல்லாமல், இன்றைய இரண்டாம் வாசகத்தில் (கொலோசையருக்கு எழுதப்பட்ட திருமுகம்) பவுலடியார், “கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றையே நாடுகள்” என்பார். கடவுளுக்கு உகந்த வாழ்ந்த வாழ்வதே மேலுலகு சார்ந்த வாழ்க்கையாகும்.

ஆகவே, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் நாம், அவருடைய உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொள்வோம், அவருடைய உயிர்ப்புக்கு சாட்சிகளாகத் திகழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்

கல்லறை தகர்த்து சாவுதனை வென்று

சரித்திரம் நிகழ்த்திய

நன்னாள்…!!!

எதுவும் நிலையல்ல சாவும் அதற்கு விலக்கல்ல

என்று புன்னகை பூத்த புதுநாள்

இன்று

உயிர்ப்பு பெருநாள்….!!!

நல்வாழ்த்துக்கள்

 

Comments are closed.