அனைவருக்கும் அடைக்கல நாயகி இணையக்குழுமம் சார்பாக இயேசு உயிர்ப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்

அச்சம் கொள்ளும் மனம், அன்பின் பலத்தை உணர்வதில்லை. உயிர்த்த இயேசுவின் நற்செய்தி “அஞ்சாதீர்கள்,” அன்பின் பலத்தால் எத்தகைய சோதனைகளையும் வெல்ல முடியும். இதைத்தான், உயிர்ப்பு பெருவிழா, நமக்கு எடுத்துரைக்கிறது.

துன்பங்கள் வரும்போது, அதைக் கண்டு பயந்து நடுங்கத் தேவையில்லை. அடிமைத்தனம், அடக்குமுறை கண்டு மிரள தேவையில்லை. மாறாக, உண்மையான விடுதலை கிடைக்க, அதன் மூலகாரணங்களை கண்டு களைய வேண்டும்.

உயிர்ப்பு பெருவிழா மூலம் இறைவன் எல்லாவற்றையும் புதிதாக்குகின்றார். நம்மை விடுதலையின் பாதையில் நடக்க செய்வார்.

ஏனெனில், உயிர்த்த இயேசு, நம்மை, ஒரே உறவாக இறைவனின் அன்பு மக்களாகமாற்றுகிறார். இறைவனை, உயிர்த்த இயேசுவை, நம்மில் உணர அன்பை பகிர்வோம்.

அனைவருக்கும் கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்கள் உரித்தாகுக!

உயிர்த்த ஆண்டவர் உங்களை என்றென்றும் ஆசிர்வதிப்பாராக

Comments are closed.