சில்லாலைப் பங்கில் சிறப்பாக நடைபெற்ற இளையோர் தினம்

ஞாயிற்றுக்கிழமை இன்று சில்லாலை பங்கு இளையோர்களின் இளையோர் தினம் சில்லாலை பங்குத் தந்தை அருட்திரு.அகஸ்ரின் அடிகளாரின் நெறிப்படுத்தலில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. சில்லாலை கதிரை மாத ஆலயத்தில் காலை 6.30 மணிக்கு இளையோர் மன்ற கொடியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.கொடியேற்ற நிகழ்வினை தொடர்ந்து மறை மாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் அடிகளார் தலமையில் இளையோர் தின சிறப்புத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. திருப்பலியை தொடர்ந்து காலையில் இளையோருக்கான விளையாட்டு நிகழ்வுகளும் மாலை 6.00 மணிக்கு ஆலய வளாகத்தில் அமைந்துள்ள திறந்த வெளி அரங்கில் இளையோர் சிறப்பிக்கும் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன. கலை நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மறை மாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநரும் சிறப்பு விருந்தினராக இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு யேசுரட்ணம் அடிகளாரும், கெளரவ விருந்தினராக அருட்திரு அன்புராசா (அ.ம.தி) அடிகளாரும் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் அருட்திரு அன்புராசா அடிகளார் இளையோரின் தற்கால வாழ்வை மையப்படுத்தி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் பாடல்கள், நாடகம், வில்லுப்பாட்டு ஆகிய காலை நிகழ்வுகளுடன் சிறப்பு நிழ்வாக யோபுவின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் கூத்தும் இளையோரினால் சிறப்பான முறையில் ஆற்றுகை செய்யப்பட்டன. இந்நிகழ்வில் குருக்கள், அருட்சகேதரிகள், உத்தியோகஸ்தர்கள், பங்கு மக்களென நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டார்கள்.

Comments are closed.