அதிசய ஆரோக்கிய அன்னையை நோக்கி ஜெபம்

ஓ மிகவும் பரிசுத்தமான கன்னிகையே இரு விழி திறந்து நல்வழி காட்டுபவளே செந்தாமரை மலர்மீது வீற்றிருந்து அருள் பொழியும் சீலியே சொல்லன்னா துயரங்களோடு வாழவழியின்றி உன் திருமுற்றம் நின்று உன் திருமுக மண்டலத்தை அந்நார்து பார்த்து கெஞ்சி மண்றாடிய ஒருவராகிலும் உம்மால் ஒருபோதும் கை விடப்படுவதில்லை என அறிந்து எங்கள் இக்கட்டான வேளையில் உமது மண்றாட்டையும் உமது நேச மகனின் பரிவிரக்கத்தையும் எதிர் பார்த்து காத்திருக்கின்றோம் எங்களுக்கு ஏக அடைக்கலமும் நித்திய காவலுமாய் இருக்கின்ற மிகவும் பரிசுத்தமானவளும் நித்திய கன்னிகையுமாய் விளங்கும் அதிசய ஆரோக்கிய அன்னையே இப்பாவ உலகில் நாங்கள் பரிசுத்தமாய் வாழ்ந்திட திவ்ய இயேசுவாள் எங்களுக்கு அருளப்பட்ட அன்னை நீ என அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு உம் உதவியை இறைஞ்சுகிறோம் தயையுள்ள தாயே உம்முடைய பிள்ளைகளாகிய எங்கள் மேல் என்றும் இரக்கமாய் இருக்கும்படி உன் மகனிடம் மண்றாடும் எங்கள் வாழ்விற்கு தேவையான அனைத்து வரங்களையும் அவரிடம் இருந்து கனிவோடு பெற்றுதாரும்

Comments are closed.