இளவாலை திருக்குடும்ப கன்னியர்மட மகாவித்தியாலயத்திற்கு கியூடெக் நிறுவன இயக்குனர் எஸ். இயூஜின் பிரான்சிஸ் அடிகளார் அன்பளிப்பு

இலங்கை கரித்தாஸ் தேசிய நிறுவனத்தின் 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு யாழ் மறைமாவட்ட ரீதியாக நடாத்தப்பட்ட விவாத போட்டியில் யாழ் இளவாலை திருக்குடும்ப கன்னியர்மட மகாவித்தியாலயம் இரண்டாம் இடத்தை பெற்றமைக்காக இலங்கை கரித்தாஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் கரித்தாஸ் – கியூடெக் நிறுவனம் யாழ் இளவாலை திருக்குடும்ப கன்னியர்மட மகாவித்தியாலய நூலகத்திற்கு பாடசாலை நூல்களை அன்பளிப்பு செய்தது. மேற்படி நூல்கள் 23 ஒக்ரோபர் 2018 அன்று பாடசாலை அதிபர் அருட்சகோதரி சகாயமேரி அவர்களிடம் யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குனர் எஸ். இயூஜின் பிரான்சிஸ் அடிகளாரால் அன்பளிப்புச் செய்யப்பட்டது. அன்றைய தினம இப் போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு வெற்றிப்பதக்கங்களும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டியில் சம்பத்திரிசியார் கல்லூரி சம்பியன்

16 வயதிற்குட்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டியில் யாழ் புனித சம்பத்திரிசியார் கல்லூரி 2018 ஆண்டின் சம்பியன் கிண்ணத்தை தனதாக்கி கொண்டது என்பது மகிழ்வான செய்தியாகும். பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாடட்டம் என்றால் இலங்கையின் வட பகுதியில் அது யாழ் புனித சம்பத்திரிசியார் கல்லூரிதான் என்ற பாரம்பரிய பெயரையும் புகழையும் இன்றும் பாதுகாத்துவரும் யாழ் புனித சம்பத்திரிசியார் கல்லூரி அதிபர் ஏ.பி. திருமகன் அடிகளார் மற்றும் சம்மந்தப்பட்ட பொறுப்பாளார்கள்; துறைசார் வீரர்கள் அனைவருக்கும் காலைக்கதிர் பத்திரிகையின் கிறிஸ்தவ செய்தி இதழ் அன்பு நெஞ்சங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து தொடருங்கள் சாதனையை என வேண்டி நிற்கிறது.

Comments are closed.