அன்புக்கரங்களினால் கோ/ கந்தவேள் தமிழ் கலவன் பாடசாலை அனைத்து மாணவர்களுக்கும் 2019 ஆண்டுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டது
அன்புக்கரங்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.நாம் தெரிவு செய்தமைக்கு அமைய யா/கோப்பாய் தெற்கு கந்தவேள் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்குமான கொப்பிகள் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர் திரு இராதாகிருஷ்ணன்,வடமராட்சி கல்விப்பணிப்பாளர் திரு அன்ரனிஜோர்ச், மற்றும் ஓய்வு பெற்ற இலங்கை வங்கி உத்தியோகத்தர் திரு குணசேகரம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இவ் உதவியினை அடைக்கலநாயகி உதவும் கரங்கள் ஏற்பாட்டில் நடைற்ற அதிஸ்டலாப சீட்டிலுப்பின் மூலம் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே இதற்கான நிதி உதவியை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள்
Comments are closed.