புகழ் பூத்த உத்தம தலைவன் ஓய்வு பெற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை ஆயராக அபிசேகம் செய்யப்பட்ட நாள்

மானிடத்தில் மங்கா புகழ் பூத்த உத்தம தலைவன் ஓய்வு பெற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை ஆயராக அபிசேகம் செய்யப்பட்ட நாள் 20.10.2018(சனிக்கிழமை) இன்றைய நாளாகும்.

மதத்திற்கு அப்பால் இனம், மதம், மொழி, சாதி சமயம் பாராமல் மக்களுக்காக ஆன்மிக பணியோடு மட்டுமல்லாது அனைத்து மக்களின் உரிமைக்காகவும் தன்னை அர்ப்பணித்து மானிடத்தில் மங்கா ஒளி சுடராக திகழும் ஒய்வு பெற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு யோசேப்பு ஆண்டகை அவர்களை ஆயர், குருக்கள், கன்னியர்கள், அருட்சகோதரர்கள், பொது நிலைத்தலைவர்கள், கத்தோலிக்க ஒன்றியம், கத்தோலிக்க இறைமக்கள் சார்பாக இந்த இனிய நன் நாளிலே வாழ்த்தி வரவேற்று நிற்கின்றோம்.

தமிழ் தேசிய அரங்கில் இருந்து என்றும் நீக்க முடியாத மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை இக்கட்டான கால சூழ் நிலையிலும் மதம் கடந்து , மொழி கடந்து, சாதி சமயம் கடந்து இன விடுதலைக்காக தனது ஆயர் பணிக்காலத்தில் அதிகமான நேரத்தை தமிழ்தேசிய விடிவுக்காக உண்மையுடனும் நேர்மையுடனும் சத்தியதுடனும் உன்னதமான முறையிலும் பணியாற்றினார் என்பது யாம் அனைவரும் அறிந்ததே.

இவ்வேளையில் ஆட்சியில் அமந்திருந்த ஆட்சியாளர்களின் மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணிந்து விடாது தமிழரின் தனித்துவத்தையும் இனத்தின் உண்மைத்தன்மையையும் கடல் கடந்து வெளியுலகின் கவனத்துக்கு கொண்டுவந்த மாமானிதர் ஒய்வு பெற்ற ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை ஆவர்.

இவர் ஆயர் நிலையில் இருந்து ஓய்வு பெற்று இருந்தாலும் சத்திய வேள்வியில் நித்தமும் வேகிய சரித்திர நாயகன் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரனுக்கு அடுத்ததாக இனவிடுதலை என்பதற்காக உண்மையாக குரல் கொடுத்த இனவிடுதலை போராளி என்பது நிதர்சனமான உண்மை.

ஓய்வு பெற்ற மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் தற்போது ஓய்வு பெற்று வரும் நிலையில் நிட்சயமாக மக்களின் இறை வேண்டுதலுடன் கூடிய சீக்கிரம் மக்களின் தலைவனாக மீண்டும் எழுந்து வருவார் என்பதில் எவ்வித ஜயப்பாடும் இல்லை.

இன்று ஆண்டகை அவர்கள் இல்லாத நிலையில் எமது மக்கள் ஒரு பெரிய பொக்கிசத்தை இழந்து தவிர்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

எனவே ஓய்வு பெற்ற ஆயர் ஆண்டகை அவர்களே தமிழினத்தின் வரலாறு உங்களை மறந்து விடவும் முடியாது மழுங்கடிக்கவும் முடியாது என்பதே யாதர்த்தமான உண்மை.

இதை மனதில் நிறுத்தியவர்களாக எமது ஓய்வு பெற்ற ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் மீண்டும் உடல் நல சுகத்துடன் மக்கள் முன் தோன்றவும், கூடிய சீக்கிரம் நோய்களில் இருந்து விடுபடவும், மீண்டும் ஒரு உன்னத தலைவனாக மங்கா புகழ் பூத்த நாயகனாக அனைத்து மக்கள் முன்னும் தோன்ற வேண்டும் என பிரார்த்தனை செய்யும் படியாகவும், மீண்டும் ஒரு தடவை ஓய்வு பெற்ற ஆண்டகை அவர்கள் ஆயராக அபிசேகம் செய்யப்பட்ட இனிய நாளில் வாழ்த்துக்கள் கூறி நிற்கின்றோம்

Comments are closed.